அண்டை நாடான மலேசியாவின் படு கவான் MP கஸ்தூரி பட்டோ தனது பிரெஞ்சு காதலர் அலைன் மோர்வனுடன் நேற்று புத்ராஜெயாவில் உள்ள தேசிய பதிவுத் துறையில் சிவில் திருமணம் செய்து கொண்டார். சிங்கப்பூர் மற்றும் மலேசிய அரசியல் தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சுமார் 30 பேர் மட்டுமே கலந்து கொண்ட இந்த விழாவில், தம்பதியினர் இருவரும் காலை 11 மணியளவில் பதிவாளர் முன் தங்கள் திருமண உறுதிமொழியை அளித்தனர். அதற்கு அவரது தாயார் மேரி பாட்டோ, 73, மற்றும் சகோதரி ஷாலினி, 41 மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் சாட்சியாக இருந்தனர்.
DPAயின் லிம் கிட் சியாங், ராம்கர்பால் சிங் மற்றும் மலேசியாவுக்கான பிரெஞ்சு தூதர் ரோலண்ட் கல்ஹாராக் ஆகியோரும் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 43 வயதான கஸ்தூரி, கடந்த 2019 பிப்ரவரியில், பெல்ஜியத்தில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில், பிரிட்டன் நாட்டை சேர்ந்த 51 வயதான மோர்வனைச் சந்தித்துள்ளார்.
“நாங்கள் ஒருவரையொருவர் அடிக்கடி சந்தித்தோம், எங்களுக்கு மிகவும் ஒத்த சிந்தனை இருப்பதை உணர்ந்தோம். நாங்கள் எங்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்கு முன், ஒரு வலுவான தொடர்பு இருப்பதை உணர்ந்தோம், ”என்று அவர் கஸ்தூரி ஊடகங்களிடம் கூறினார்.
மோர்வன், மரண தண்டனைக்கு எதிரான வழக்கறிஞராக இருந்ததாகவும், 25 ஆண்டுகளுக்கு முன்னாள் நிருபராக இருந்த பின்னர் பத்திரிகையாளர்களின் உரிமை ஆர்வலராக பணியாற்றியதாகவும் அவர் கஸ்தூரி கூறினார்.
பிரான்சில் மனநலம் பாதிக்கப்பட்ட குற்றவாளிகள் பற்றிய ஆவணப்படத்தையும் மோர்வன் தயாரித்து வருவதாக அவர் கூறினார். தான் கத்தோலிக்க திருமணத் தயாரிப்புப் படிப்பை மேற்கொண்டதாகவும், இந்த ஆண்டு இறுதியில் தேவாலயத்தில் எங்களது திருமணம் நடைபெறும் என்றும் கூறினார்.