TamilSaaga

“சிங்கப்பூரில் முன்னாள் மனைவிக்கு சரமாரி கத்திக்குத்து” : கைதான கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

சிங்கப்பூரின் ITE எனப்படும் Institute of Technical Education கல்லூரி வளாகத்தில் உள்ள கார் பார்க் ஒன்றில் தனது முன்னாள் மனைவியை கத்தியால் குத்தி கொன்ற ஓய்வு பெற்ற ஒருவருக்கு இன்று புதன்கிழமை (செப்டம்பர் 22) நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீட் செர் ஹெங் என்ற அந்த 69 வயதான நபர் தனது முன்னாள் மனைவி, திருமதி லோ ஹ்வீ ஜியோக்யிடம் (56) சம்பவத்திற்கு முன் பணம் தருமாறு கோரியுள்ளார். மேலும் உயர்நீதிமன்றம், அவர் தனது மனைவி தகாத உறவில் ஈடுபட தேதியை அவரை கதியில் பொறித்துள்ளதாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று அவர் அந்த கத்தியோடு சேர்ந்து மூன்று கத்திகளோடு மனைவியை காண சென்றுள்ளார். ஜூலை 19, 2018 அன்று இரவு 7.30 மணியளவில் ஆங் மோ கியோ வளாகத்தில் லோவை பதுங்கி இருந்து தக்க முற்பட்டு அவர் காருக்குள் இழுத்துச்சென்றுள்ளார். அவருடன் போராடி அந்த பெண்மணி தப்பிக்க முற்பட்டபோது கண்மூடித்தனமாக 8 முறை அந்த பெண்மணியை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதனையடுத்து தன்னைத்தானே 13 முறை கத்தியால் குத்திக்கொண்டு அந்த பெண்மணி மீதே சரிந்துள்ளார்.

அப்போது அவரை காப்பாற்ற வந்த அருகில் இருந்தவர்களிடம் “என்னை சாகவிடுங்கள், என்னை காப்பாற்றாதீர்கள்” என்று அவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. திருமதி லோவின் இடது மேல் மார்பு, இடது பின்புறம் மற்றும் இடது கீழ் முதுகு ஆகிய மூன்று இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் மரணத்தை ஏற்படுத்த போதுமானது என்று தடயவியல் நிபுணர் கூறினார். அவர் மீது ஆரம்பத்தில் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 300 (a) ன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது, இது கட்டாய மரண தண்டனையை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கொலையின் போது, ​​சீட் ITE தலைமையகத்தில் தனது வேலையில் இருந்து ஓய்வு பெற்றார் மற்றும் மாதாந்திர மத்திய வருங்கால வைப்பு நிதி செலுத்துதலை நம்பியிருந்தார். இந்த ஜோடி கடந்த ஏப்ரல் 7, 1993ல் திருமணம் செய்து கொண்டது, ஜூன் 13, 2011 அன்று விவாகரத்தும் பெற்றது. அவர்களுக்கு ஒரு மகள் இருக்கின்றார். இந்நிலையில் அவர் திருமதி லோ தகாத உறவில் ஈடுபட்டத்தை கண்டுபிடித்த நாளாக கருதப்படும் தேதிகளை நினைவூட்டும் வகையில் “010609” மற்றும் “020609” என்ற தேதிகள் பொறிக்கப்பட்ட ஒரு கத்தியை செய்துள்ளார்.

சம்பத்தன்று மாலை 4.40 மணியளவில் கார்பார்க் பகுதிக்கு வந்து மிஸ் லோவுக்காக காத்திருந்தார். இரவு 7.30 மணியளவில், செல்வி லோ தனது காரை நெருங்குவதைப் பார்த்தபோது, ​​சீட் தனது வாகனத்திலிருந்து இறங்கி அவரை நோக்கி வேகமாக நடந்துள்ளார். அதன் பிறகு அந்த பெண்மணியை சரமாரியாக கத்தியால் குத்தி கொன்றுள்ளார்.

Related posts