TamilSaaga

“சிங்கப்பூரில் 2023ல் அறிமுகமாகும் மின்சார படகுகள்” : செயல்படுத்தும் சிங்கப்பூர் Shell நிறுவனம்

“எல்லாம் மின்மயம்”, உலக அளவில் அதிகரித்து வரும் புவி வெப்பமயமாவதை தடுக்க உலகின் பல நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நமது சிங்கப்பூரும் பல முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றது. இந்நிலையில் சிங்கப்பூர் அதன் முதல் மின்சாரப் படகுகளை 2023ல், முதன்மை தீவில் இருந்து புலாவ் புகோம் இடையே இயக்க முடிவுசெய்துள்ளது, Shell நிறுவனம் இதை இயக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் நிறுவனமான பெங்குயின் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு குறைந்தபட்சம் மூன்று முழு மின்சார படகுகளை வடிவமைக்கவும், உருவாக்கவும் மற்றும் இயக்கவும் Oil Giant நிறுவனமானது ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது. இந்த பேட்டரி மூலம் இயக்கப்படும் 200 இருக்கைகள் கொண்ட ஒற்றை அடுக்கு கப்பல்கள், 2023ம் ஆண்டின் முதல் பாதியில் தனது பயணத்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவை தற்போது பயன்படுத்தப்படும் டீசல் மூலம் இயங்கும் படகுகளை மாற்றுவதன் மூலம் தொழிலாளர்களை புலாவ் புகோமில் உள்ள ஷெல்ஸ் எனர்ஜி மற்றும் கெமிக்கல்ஸ் பூங்காவிற்கு கொண்டு செல்லும்.

திட்டத்திற்கு எவ்வளவு செலவாகும் என்று ஷெல் வெளியிடவில்லை. ஆனால் இதே அளவுள்ள படகுகளைப் பயன்படுத்தி சமீபத்தில் முன்மொழியப்பட்ட திட்டத்தைப் பற்றிய செய்தி கட்டுரையில், ஒரு கப்பலை கட்ட
கிட்டத்தட்ட 2 மில்லியன் வெள்ளி – அல்லது டீசல் சமமானதை விட மூன்றில் இரண்டு பங்கு விலையாகும். ஷெல் படகுகள் லித்தியம் அயன் பேட்டரி அமைப்பு 1.2MWh திறன் கொண்டது. 37 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய இந்த கப்பல் சத்தமில்லாமல் பயணிக்கும்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், உலகின் மிகப்பெரிய மின்சார படகு நோர்வேயில் தொடங்கப்பட்டது. Electrive.com என்ற ஆன்லைன் மின்மயமாக்கல் செய்தியின்படி 139.2 மீ கப்பலில் 600 பயணிகள் மற்றும் 200 கார்கள் செல்ல இடம் உள்ளது. தாய்லாந்தில், பாங்காக்கில் உள்ள சாவோ ஃப்ரேயா ஆற்றில் செல்லும் மின்சார படகு சேவை, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts