காதல் என்பது இன்றைய காலக்கட்டத்தில் விபரீதம் என்றே சிலர் சொல்கின்றனர். அதற்கு காரணமாக சமீபத்தில் காதலியை துண்டு, துண்டாக வெட்டி காட்டில் வீசி வந்த காதலன் ஒரு பக்கம். காதலனுக்கு ஆசையாக கூல் ட்ரிங்ஸ் கொடுத்து அதில் விஷத்தினை கலந்து கொன்ற காதலி ஒரு பக்கம் என எங்கு கேட்டாலும் இதே கதையாக இருக்கிறது.
இன்னொரு பக்கமோ ஒருதலை காதலர்கள் தொல்லை வேறு. ஒரு பெண்ணை பிடித்து காதலிக்க வேண்டியது அவர்கள் வேண்டாம் என்றால் துரத்தி கொண்டே இருப்பர். ஒரு கட்டத்தில் கடுப்பாகி கையில் கிடைப்பதை வைத்து கொலை செய்வதோ, அசிட் முட்டை அடிப்பதோ என ஏகப்பட்ட வன்முறைகளையே சமூகம் அதிகம் பார்த்து இருக்கிறது.
இதையும் படிங்க: வெளிநாட்டில் வேலைப் பார்த்தாலும்.. காதல் விஷயத்தில் தீயாய் செயல்பட்ட இளைஞர்
இந்த வன்முறை பூமியில் அப்போ, அப்போ தான் அழகு செடிகளும் இருக்கும். அது போல சில காதல்களும் இந்த காலத்தில் இருக்கத்தான் செய்கிறது. அதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டாக அமைந்து இருக்கிறார்கள் இந்தியாவின் அசாமை சேர்ந்த ஒரு ஜோடி.
24 வயது பிரார்த்தனா போராவும், அதே பகுதியை சேர்ந்த பிதுவன் தாமுலியும் காதலித்து வந்துள்ளனர். விரைவில் இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவெடுத்து இருந்தனர். ஆனால் திடீரென பிரார்த்தனாவிற்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. உடனே அவரை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிறுது நேரத்தில் பிரார்த்தனா இறந்தார்.
அவரின் இறுதி சடங்கில் பிதுவன் கதறிய காட்சி அங்கிருந்தவர்களை நிலைகுலைய செய்தது. சிறுது நேரம் கழித்து முடிவெடுத்தவராக உயிரிழந்த பிரார்த்தனாவை கல்யாணம் செய்துக்கொண்டு தனது மனைவியாக அனுப்பி வைத்தார். இனி தான் கல்யாணம் செய்துக்கொள்ளவே மாட்டேன் எனவும் முடிவெடுத்திருப்பதாக தெரிவித்தார். இப்படியும் சில காதல்கள்!