TamilSaaga

“சிங்கப்பூர் வரும் வெளிநாட்டு ஊழியர்கள்” : மாற்றி அமைக்கப்படும் SHN மற்றும் Onboarding Arrangements – Update செய்யப்பட்டுள்ள பல கட்டுப்பாடுகள்

இந்தியா உள்பட உலகின் பிற நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வரும் தொழிலாளர்கள் மற்றும் பயணிகளுக்கான சட்டதிட்டங்களை சிங்கப்பூர் அரசு வெகுவாக தளர்த்தி வருகிறது. குறிப்பாக VTL திட்டத்தின் மூலம் சிங்கப்பூர் வரும் பிற நாட்டு பயணிகளுக்கு பல தளர்வுகள் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்ட வண்ணம் இருக்கின்றது. இந்நிலையில் CMP (Construction, Marine and Process) துறைகளில் WP எனப்படும் Work Permit Holders சிங்கப்பூர் வரும்போது எந்த வகையான SHN மற்றும் Onboarding Arrangements கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்பதை சிங்கப்பூர் அரசு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. (சிங்கப்பூர் அரசால் வகைப்படுத்தப்பட்ட 2 மற்றும் 3 ஆகிய நாடுகளுக்கு மட்டுமே இது பொருந்தும்)

மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் தடுப்பூசி போட்ட மற்றும் போடாத பணியாளர்களுக்கான தனிமைப்படுத்துதல் விவரங்கள் தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ளன. CMP துறையை சேர்ந்தவர்கள் மேற்குறிப்பிட்ட கட்டுப்பாடுகளை கடைபிடித்து சிங்கப்பூருக்குள் நுழையலாம்.

மேலும் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி தடுப்பூசி போடாத CPM துறை சார்ந்த பணியாளர்கள் சிங்கப்பூருக்குள் வந்த முதல் மற்றும் நான்காவது நாளில் ART சோதனை மேற்கொள்ளவேண்டும். அதே போல 6வது நாளில் PCR மையத்தில் சோதனை செய்துகொள்ளவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு : S-Pass மூலம் சிங்கப்பூர் வரும் பயணிகள் VTL மூலம் பயணிக்க இனி Vaccinated Travel Pass எடுக்கவேண்டிய அவசியமில்லை என்ற அதிகாரப்பூர்வ தகவலை மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related posts