உலக அளவில் பெருந்தொற்று நோயால் பல நாடுகளுக்கு சவால்கள் இருந்தபோதிலும் சிங்கப்பூர் மற்றும் இந்தியா தொடர்ந்து பரஸ்பர ஆதரவின் மூலம் இன்னும் நெருக்கமான உறவை ஏற்படுத்த முடிந்தது என்று சிங்கப்பூர் துணை பிரதமர் ஹலிமா யாக்கோப் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூறினார். மேலும் அண்டை நாடான இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தில் இந்திய மக்களுக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
இரு நாடுகளும் இடையில் பரந்த மற்றும் ஆழமான வலுவான கூட்டாண்மையைப் பகிர்ந்து கொண்டதாகவும், பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் மக்களுக்கிடையேயான உறவுகள் உள்ளிட்ட பகுதிகளில் வலுவான அடிப்படைகளால் ஆதரிக்கப்படுவதாகவும் துணை பிரதமர் கூறினார்.
“சிங்கப்பூர் மக்களின் சார்பாக, இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தையொட்டி, உங்கள் மேன்மை மற்றும் இந்திய மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஹலீமா கூறினார். மேலும் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு வெளியிட்ட ஒரு செய்தியில், மேலும் உங்கள் மேன்மையின் நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்திக்கொள்கிறேன்” என்று ஹலிமா கூறினார்.
இந்தியாவின் வளர்ச்சி வாய்ப்புகளில் சிங்கப்பூர் தொடர்ந்து நம்பிக்கையுடன் உள்ளது என்றும். ஆண்டுதோறும் அன்னிய நேரடி முதலீட்டின் மிகப்பெரிய ஆதாரமாக உள்ளது என்றும் அவர் கூறினார்.