TamilSaaga

சிங்கப்பூரில் வொர்க் பெர்மிட்டில் இருந்து SPass மாறணுமா? 3000 சிங்கப்பூர் டாலரில் சம்பளம்.. செம வாழ்க்கை… இத படிங்க!

சிங்கப்பூரில் வேலையில் இருக்கும் ஊழியர்களுக்கு வொர்க் பெர்மிட்டில் இருந்து spassல் மாற வேண்டும் என்ற ஆசை இருக்கத்தானே செய்யும். வேலை கிடைத்தால் கூட எப்படி மாற வேண்டும் என்ற சந்தேகம் இருந்து கொண்டு தான் இருக்கும். அப்படி உங்களுக்கும் சந்தேகம் இருந்தால் இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

சிங்கப்பூர் வேலைக்கு ஸ்கில் முடித்து விட்டு வேலைக்கு வரும் ஊழியர்கள் வொர்க் பெர்மிட்டில் எடுக்கப்படுவார்கள். இவர்களின் சம்பளம் கூட அடிப்படையாக தினம் $18 சிங்கப்பூர் டாலரில் தான் இருக்கும். முதல் சில வருடங்கள் கஷ்டப்பட்டால் சம்பள உயர்வு இருக்கும். நீங்க வேலை பார்க்கும் துறைக்கு ஏற்ப கோர்ஸ்கள் செய்யும் போது ப்ரோமோஷனுடனான சம்பள உயர்வும் கிடைக்கும்.

சிலர் வேறு படிப்பினை படித்து விட்டு சிங்கப்பூரில் வொர்க் பெர்மிட்டில் வேலைக்கு வந்திருப்பார்கள். அவர்களுக்கு சிங்கப்பூரில் வேலைக்கு வந்த பின்னர் அவர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ப வேலை கிடைக்கும். அதுவும் SPassல் கிடைக்கும் போது எப்படி மாறலாம்.

இதையும் படிங்க: டிகிரி படித்தவர்களும், படிக்காதவர்களும் ரெடியாக இருங்க… உங்களுக்கு சிங்கப்பூரில் சூப்பர் வேலை கிடைக்க இதை Follow பண்ணுங்க…

முதலில் வேலை கிடைத்தவுடன் பழைய கம்பெனியில் வேலை மாற இருப்பதை கூறி Trans-Letterஐ வாங்க வேண்டும். சில நிறுவனங்கள் இதை உடனே செய்ய மாட்டார்கள். அப்படி இருக்கும் போது MOMல் இதுகுறித்து தெரிவித்தால் அவர்கள் கொடுக்கும் ஃபார்மினை கம்பெனியில் கொடுக்கும் போது அவர்களிடம் இருந்து உடனே ஒப்புதல் கிடைக்க வாய்ப்பு உண்டு. அந்த லெட்டர் வாங்கியவுடன் புது கம்பெனி உங்களுக்கு Spass அப்ளே செய்யலாம். இதற்கும் 2ல் இருந்து 3 வாரங்கள் எடுக்கும்.

அதுவரை உங்கள் பழைய கம்பெனி கொடுத்த இருப்பிடத்தினை காலி செய்யக்கூடாது. அப்படி நீங்க காலி செய்தால் அது சட்டவிரோதமாகும். பழைய கம்பெனி உங்க மீது புகார் கொடுக்கலாம். அப்படி கொடுக்கும் போது நீங்கள் கைது கூட செய்யப்படலாம். உங்களை சிங்கப்பூரில் இருந்து வெளியேற்றக்கூட வாய்ப்பு உண்டு.

இதையும் படிங்க: லட்சத்தில் காசு கொடுக்க முடியாதா? கவலையை விடுங்க… Skilled Test இருக்கு… பாஸ் பண்ண என்ன செய்யணும் தெரியுமா… இத படிங்க முழுசா…

புதிய கம்பெனி உங்களுக்கு அப்ளே செய்த SPass அப்ரூவ் ஆகும்பட்சத்தில் நீங்கள் Notice காலத்தினை பழைய கம்பெனியில் முடித்து கொண்டு வெளியேறலாம். பழைய கம்பெனியில் நீங்க வெளியேறும் போது வொர்க் பெர்மிட் ரத்து செய்யப்பட்டதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

சிலருக்கு இப்படி அப்ளே செய்யும் போது முதல் முறையில் ரிஜெக்ட் ஆக கூட வாய்ப்பு உண்டு. அப்படி இருக்கும் போது சரியான டாக்குமெண்ட்களை சமர்பித்து 2வது அப்ளே செய்யும் போது அப்ரூவ் ஆக வாய்ப்பு உண்டு. இதில் மேலும் சந்தேகம் இருந்தால் உங்களுக்கான சிங்கப்பூர் ஏஜென்சியை தொடர்பு கொள்ளுங்கள். SPass கூட அவர்கள் தான் அப்ளே செய்வார்கள் என்பதால் உங்களுக்கு என்ன மாதிரியான நடைமுறைகள் இருக்கும் என்பதை தெளிவாகவே கூறிவிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts