TamilSaaga

“உடலுறவு இன்பம் தருமா?” : சிங்கப்பூர் நடிகையிடம் ஓப்பனாக கேட்ட 10 வயது மகன்!

சிங்கப்பூரில் முன்னாள் மீடியாகார்ப் நடிகையான ஜேஸ்லின் டே, சமீபத்தில் தனது மகன் ஜாவியர் வோங், உடலுறவு (Sex) குறித்து கேட்ட கேள்வியை எப்படிக் அவர் கையாண்டார் என்று தனது அனுபவத்தை தற்போது பகிர்ந்துள்ளார். கடந்த ஜனவரி 3ம் தேதி தனது சமூகவலைத்தளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் அவரால் போடப்பட்ட பதிவில், “ஆணுறுப்பு, பெண்ணின் யோனி எனப்படும் Vaginaவிற்குள் செல்லும்போது உண்மையில் நன்றாக இருக்கிறதா?” என்று தனது மகன் கேட்டதாக முன்னாள் நடிகை டே கூறினார்.

சிங்கப்பூரில் Hospital Cleaning வேலை பார்க்கும் உங்களுக்கு கம்பெனி மாற்றம் வேண்டுமா? – உடனே Apply செய்யலாம்

மேலும் நான் அவனுக்கு Sex பற்றி கற்றுக்கொடுப்பது இது முதல்முறை அல்ல என்றும், “தூய்மையாக இருப்பது” எப்படி என்பதும் குறித்து நான் அவனுக்கு கற்றுக்கொடுத்துள்ளேன் என்றும் அவர் கூறினார். ஆண்குறி யோனிக்குள் சென்றபோது அது மிகவும் நன்றாக இருந்தபோதிலும், அத்தகைய உணர்வு திருமணத்திற்கு பிறகு மட்டுமே கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று டே கூறினார். மேலும் “பாலியல் இன்பத்திற்காக மட்டும் நீ ஒருவரோடு இருக்கும்போது நன்றாக நீ உணர்ந்தாள் உன்னிடம் ஏதோ தவறு இருக்கிறது என்று அர்த்தம்”. “இது ஒரு போதைப்பொருளால் உடலைத் தவறாக திருப்திப்படுத்துவது போலவும் அல்லது பசியை உண்டாக்கும் இரசாயனங்கள் நிறைந்த ஒரு குப்பை உணவை சாப்பிடுவது போன்றது” என்றும் அவர் கூறினார்.

“தவறான இன்பத்திற்காக செய்யப்படும், இந்த உடலுறவு உங்கள் ஆரோக்கியத்தை கூட அழிக்கக்கூடும், யாருடனும் எப்படியாவது உடலுறவு கொள்ளும் நபர்கள் பாலியல் ரீதியாக பரவும் வைரஸ்கள் மற்றும் நோய்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். உங்கள் உடல் மாசுபட்டது மட்டுமல்ல, உங்கள் ஆன்மாவும் உங்கள் ஆவியும் மாசுபடும்” என்றார். எனவே திருமணத்திற்கு முன் Zavier ஒரு பெண்ணைத் தொடவோ முத்தமிடவோ கூடாது, ஏனெனில் இது உடலுறவுக்கு வழிவகுக்கும். கூடுதலாக, அவன் பெண்களின் உடல்களைப் பற்றி “விரசமான பேச்சுகளில்” ஈடுபடக்கூடாது. அதேபோல இதற்கு முன்பு நீ உடலுறவு கொள்ளாததற்காக சில சிறுவர்கள் “நீ எல்லாம் ஒரு ஆண் மகனா” என்றெல்லாம் பேசும் சிறுவர்களை நம்பக்கூடாது என்றார்.

“எனது ஆண்குறி விறைப்பாக நின்று, நான் உடலுறவு கொள்ள விரும்பினால் என்ன செய்வது?” என்றும் தனது மகன் கேட்டதை டே “ஹைலைட்” செய்தார். டே, அவருக்கு பதிலளிக்கும் விதமாக ஆரம்பத்தில் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளுமாறு கூறினார். இதற்கு வேறு ஏதேனும் தீர்வுகள் உள்ளதா எனத் தெரியவில்லை என்று ஒப்புக்கொண்ட போதிலும், கிளர்ச்சிக்கான ஒரு தீர்வாக “சுயஇன்பத்தை” Zavier செய்யக்கூடாது என்று டேய் வெளிப்படுத்தினார். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரை பின்தொடரும் பலரும் அவருடைய இந்த வெளிப்படையான கருத்தை வரவேற்றுள்ளனர். அதே நேரத்தில் பலர் இது முகம்சுளிக்கும் வண்ணம் உள்ளதென்றும் கூறியுள்ளனர்.

“கழட்டிவிட்ட மலேசியா” : ஆனால் சற்றும் தளராமல் போராடி சிகரத்தைத் தொடும் சிங்கப்பூர்

எதுஎப்படி இருந்தாலும் இந்த நிகழ்வு குறித்து பேசிய டே, தான் கற்றுக் கொடுத்ததில் தனது குழந்தை 100 சதவீதம் சாதிப்பார் என நான் எதிர்பார்க்கவில்லை என்றும், இன்னும் உடலுறவில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார். அதேநேரத்தில் தனக்கு வாழ்க்கையில் தனது மகனுக்கு “தார்மீக தரங்களை” கற்பிக்க வேண்டிய “கடமை” உள்ளது, இருப்பினும் அவர் சரியானதைச் செய்ய முடியுமா என்பது அவரது பொறுப்பு, என்று அவர் முடித்தார். மதர்ஷிப்பிடம் இந்த நிகழ்வு குறித்து பேசிய டே, சமூகம் இன்னும் இதுபோன்ற தலைப்பைப் பற்றி விவாதிக்கத் தயாராக இல்லை என்பதை உணர்ந்ததால், அந்த பதிவுகளை நீக்கிவிட்டதாக கூறினார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts