TamilSaaga

“என்ன இப்படி பொசுக்குன்னு கொறச்சுட்டீங்க..” சிங்கப்பூரில் முக்கிய மாற்றத்தை கொண்டுவந்த Grab – வெளியான அட்டவணை

Grab நிறுவனம் தனது சலுகைக் காலக் காத்திருப்பு நேரத்தை (Grace Time) 5 நிமிடங்களிலிருந்து 3 நிமிடங்களாகக் குறைக்கவுள்ளது. Grab நிறுவனம் சிங்கப்பூரில் தற்போது செயல்பட்டு வரும் மிகப்பெரிய டாக்ஸி சேவை நிறுவனங்களில் ஒன்றாகும்.

இந்நிலையில் Grab நிறுவனம் இதுவரை அளித்து வந்த 5 நிமிடம் என்ற இலவச Grace Timing தற்போது 3 நிமிடங்களாக குறைத்துள்ளது. 3 நிமிடங்களுக்கு மேல் Grace Time இருக்குமெனில், நேரத்திற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படும்.

மேலும் இந்த புதிய திட்டமானது அடுத்த வாரம் திங்கட்கிழமை, ஜூலை 18 முதல் தொடங்கும் என்று கிராப் தெரிவித்துள்ளது. வருகின்ற ஜூலை 18 முதல் அமலாகும் புதிய சலுகைகள் குறித்து விளக்கம் தரும் அட்டவணை இதோ..

ஜஸ்ட்கிராப், கிராப்பெட், கிராப்ஃபேமிலி, கிராப்கார், கிராப்கார் பிளஸ் மற்றும் கிராப்கார் பிரீமியம் ஆகியவை தான் மாற்றம் பெரும் Grab வகைகள். அதே நேரத்தில் ஜூலை 18 வரை இவை அனைத்திற்கும் 5 நிமிட Grace Time உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வான் மற்றும் கடல் வழி.. சிங்கப்பூருக்குள் நுழையும் அனைவரும் “SGACஐ சமர்ப்பிக்க வேண்டும்”.. நினைவூட்டும் ICA – எப்படி சமர்ப்பிக்கலாம்?

“உங்கள் பிக்-அப் புள்ளியை அடைய உங்களுக்கு போதுமான நேரம் இருப்பதை உறுதிசெய்ய தயாராக இருக்கும் போது மட்டுமே நீங்கள் சவாரிகளை முன்பதிவு செய்ய ஊக்குவிக்கப்படுகிறீர்கள்” என்று கிராப் கூறியுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts