TamilSaaga

Exclusive : சிங்கப்பூர் – திருச்சி : அக்டோபர் மாத ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமான டிக்கெட்கள் தீர்ந்துவிட்டதாக தகவல்? – தவிக்கும் மக்கள்

ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் முடிவடையப்போகிறது, முகமூடி இல்லாமல் நாம் வெளியில் பயணித்து. ஆம் கடந்த 2019ம் ஆண்டு இறுதி வரை இந்த உலகமே தனது இயல்பான வாழ்க்கையை தான் மேற்கொண்டு வந்தது. 2019ம் ஆண்டு டிசம்பர் மாத தொடக்கத்தில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் உள்ள ஒரு இறைச்சி கூடத்தில் ஏதோ ஒரு தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்றும் சீன மக்கள் இதனால் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர் என்றும் தகவல் வெளியானது. ராணுவ பீரங்கிகள் சீன நாட்டின் வீதியில் உலவுவது போல வீடியோக்கள் இணையத்தில் வலம்வந்து. சத்தியமாக தெரியாது காலம் கடந்து, சீனாவை தாண்டி அந்த தொற்று வெளியே பரவி பல லட்சம் மக்களை கொள்ளுமென்று.

2020ம் ஆண்டு பிறந்தது, WHO உலகமே கதிகலங்கும் ஒரு தகவலை அளித்தது, அது தான் உலக சுகாதாரத்திற்கு விடுக்கப்பட்ட “ரெட் அலெர்ட்”. சுமார் 21 மாதங்கள் கடந்து விட்டன, பல வகை தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன ஆனால் இன்னும் ஓயவில்லை மரண ஓலங்கள். பல்லாயிரம் உயிர் பலிகள். லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்துள்ளனர். உலகே தனது போக்கை மாற்றியுள்ளது. இந்நிலையில் இந்த இக்கட்டான சூழலிலும் குடும்பத்தை காக்க வெளிநாடுகளில் பாடுபடும் தொழிலாளர்கள் தற்போது தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். வரலாற்றில் இடம்பிடித்துவிட்டது இந்த பெருந்தொற்று

தற்போது நமது சிங்கப்பூரை பொறுத்தவரை கடந்த 3 நாட்களாக 2000க்கும் அதிகமான அளவில் தொற்றின் அளவு என்பது பதிவாகி வருகின்றது. ஆனால் கடந்த செப்டம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து VTL எனப்படும் Vaccinated Travel Lane திட்டம் மூலம் ஜெர்மனி மற்றும் புருனே ஆகிய நாடுகளில் இருந்து மக்களை வரவேற்றது சிங்கப்பூர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் பிற நாடுகளில் இருந்து குறிப்பாக இந்தியாவில் இருந்து மக்கள் (தனிமைப்படுத்துதல் இன்றி) வந்து செல்ல வாய்ப்பு அதிகமாக உள்ளது.

இந்நிலையில் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் “ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்” நிறுவனத்தின் வழியாக சிங்கப்பூரில் இருந்து இந்தியாவின் பல பாகங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றது. ஆனால் கடந்த சில மாதங்களாக பல்லாயிரக்கணக்கான மக்கள் சரியான நேரத்தில் விமானங்கள் கிடைக்காமல் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்பு விமானங்கள் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டு வருகின்றது. இன்று தான் அக்டோபர் முதல் தேதி ஆனால் இந்த அக்டோபர் மாதம் முழுவத்திற்குமான சிங்கப்பூர் முதலான திருச்சி டிக்கெட்டுகள் தீர்ந்துவிட்டதாக தகவல் வெளியாகி வெளியாகியுள்ளது. மேலும் அக்டோபர் மாதத்தில் சிங்கப்பூரில் இருந்து சென்னை செல்வதற்கான டிக்கெட்களும் தொடர்ந்து புக்கிங் செய்யப்பட்டு வருகின்றது என்று நமது தமிழ் சாகா சிங்கப்பூர் செய்தி நிறுவனத்திற்கு நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

மேலும் நவம்பர் மாதத்திற்கான டிக்கெட்டுகள் இன்னும் முன்பதிவு தொடங்கப்படாத நிலையில் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர்.

இதனால் இந்தியாவில் உள்ள விமானத்துறை அதிகாரிகளும் இங்கு சிங்கப்பூரில் பணியாற்றும் இந்திய தூதரக அதிகாரிகளும் இந்த விஷயத்தில் தலையிட்டு சிறப்பு விமானங்கள் இயங்க அனுமதிக்குமாறு பலர் தங்களது கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இறப்பு போன்ற மிகமுக்கிய காரியங்களுக்கு கூட தாயகம் திரும்ப முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

Source : நந்தனா ஏர் ட்ராவல்ஸ், திருச்சி – 9600223091

Related posts