TamilSaaga

சிங்கப்பூரில் பாஸ்போர்ட் தொடர்பான மோசடி அழைப்புகள்.. “+65” எண்ணிலிருந்து அழைப்பு வந்தால் உஷார் – எச்சரிக்கும் ICA

கடந்த சில வாரங்களுக்கு முன்பு நமது சிங்கப்பூர் தனது எல்லை கட்டுப்பாடுகளை தளர்த்திய நிலையில், பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் மற்றும் புதுப்பிக்கும் பொருட்டு அளிக்கப்படும் விண்ணப்பங்களின் அளவு அதிகரிக்க துவங்கியது.

இதனால் IC வெளியிட்ட தகவலின்படி சிங்கப்பூரர்கள் தங்கள் பாஸ்போர்ட்டுகளுக்கு விண்ணப்பிக்கும் அல்லது புதுப்பித்துக்கொள்ளும் நேரத்தை 1 மாதத்திற்கு முன்னதாக செய்துகொள்ள அறிவுறுத்தியது. இந்நிலையில் தற்போது ஒரு புதிய பிரச்சனை குறித்த எச்சரிக்கையை ICA வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூரில் பாஸ்போர்ட் பிரச்சினைகள் தொடர்பான மோசடி அழைப்புகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு ICA அறிவுறுத்தியுள்ளது. சிங்கப்பூரின் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) நேற்று புதன்கிழமை (ஏப்ரல் 20) இந்த ஆலோசனையை வழங்கியது.

சிங்கப்பூரில் ஒரே நேர்கோட்டில் தெரிந்த 4 கோள்கள்.. வியந்து பார்த்த ஆய்வாளர்கள் – மொட்டை மாடிகளில் திரளும் மக்கள்

“+65” என்று தொடங்கும் எண்களில் இருந்து வரும் அழைப்புகள் தொடர்பாக பொதுமக்களிடம் பெற்ற கருத்துக்களை தொடர்ந்து இந்த அறிவிப்பை ICA வெளியிட்டுள்ளது. மேலும் சில சமயணங்களில் மக்களுக்கு வரும் அழைப்புகளில் “உங்கள் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது அல்லது அவர்களின் பாஸ்போர்ட்கள் ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவிக்கும் தானியங்கி குரல் செய்தி” புகாரும் அதில் அடங்கும் என்று ICA தனது முகநூல் பதிவில் கூறியது.

ICA வெளியிட்ட அதே பதிவில் “மோசடி செய்பவர்கள் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும்போது, NRIC போன்ற தனிப்பட்ட விவரங்களைக் கேட்கிறார்கள்” என்றும் கூறியுள்ளது. இந்த அழைப்புகள் தங்கள் அதிகாரிகளால் செய்யப்படவில்லை என்பதையும் ICA உறுதி செய்துள்ளது.

விண்ணப்பதாரர்களுடன் பாஸ்போர்ட் விஷயங்களைத் தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் இருந்தால், ICA அதன் அதிகாரிகள் மூலம் தனிநபர்களைத் தொடர்புகொள்வதற்கு “+65” என்ற முன்னொட்டு இல்லாமல் தரைவழி தொலைபேசிகளை மட்டுமே பயன்படுத்துவார்கள் என்றும் ICA தெளிவுபடுத்தியுள்ளது.

சிங்கப்பூரே வெறுக்கும் ஒரு கேவலமான “தந்தை”.. பின் பக்கத்தை நையப்புடைக்க “சவுக்கடி” தர உத்தரவு – மன்னிப்பு காட்டாத சிங்கை அரசு

பாஸ்போர்ட் சிக்கல்கள் குறித்து “+65” எண்களில் இருந்து அழைப்புகள் வரும்போது, ​​பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்படவும், தனிப்பட்ட விவரங்களை வெளிப்படுத்துவதைத் தவிர்க்கவும் ICA அறிவுறுத்தியது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts