TamilSaaga

“எல்லாரையும் சுடப்போறேன்” : Tiong Bharu MRT-யில் முணுமுணுத்த நபர் – துரிதமாக செயல்பட்ட பெண்ணுக்கு விருது

கடந்த ஜூலை 23, 2021 அன்று, சிங்கப்பூர் தியோங் பாரு MRT நிலையத்தில் இரண்டு பயணிகள் ரயிலில் ஏற சென்றபோது அங்கு இருந்த ஒரு நபர் தன்னிடம் துப்பாக்கி இருக்கின்றது, அதை வைத்து அனைவரையும் சுடப்போகிறேன் என்று தனக்குள் முணுமுணுத்ததை கேட்டனர். இதைக் கேட்ட அவர்கள், பணியில் இருந்த டிரான்ஸ்காம் அதிகாரியை எச்சரிக்க முடிவு செய்து, அந்த நபரைப் பற்றிய விரிவான விளக்கத்தை அளித்தனர், அவர்கள் அளித்த தகவலை சந்தேக நபரைக் கண்டுபிடித்து அவர்களைக் கைது செய்ய போலீஸார் பயன்படுத்தினார்கள்.

இதையும் படியுங்கள் : சிங்கப்பூரில் குடிபோதையில் ஓட்டுநர் மற்றும் போலீசாரை திட்டிய “இந்தியர்”

அந்த நபரைக் கைது செய்ய காவல்துறைக்கு உதவியதற்காக விழிப்புடன் துரிதமாக செயல்பட்ட பயணிகளுக்கு “பொது ஊக்க விருதுகள்” வழங்கப்பட்டன. அந்த பயணிகளில் ஒருவரான சிங்கப்பூரில் உள்ள அந்த 28 வயது பெண் அலுவலக ஊழியர் ஒருவர், அந்த நபர் எப்படி இருந்தார் என்பதை மிகத் துல்லியமாக விவரித்து, இந்தத் தகவலை அதிகாரிகளுக்குத் தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்ட அந்த சீன ஆடவர் சாம்பல் நிற டி-சர்ட் அணிந்த கருப்பு நிற முதுகுப்பையுடன் “கேப்டன் அமெரிக்கா” சாவிக்கொத்து இணைக்கப்பட்டிருந்ததாகவும், அவர்களின் ரயில் பாசிர் ரிஸ் எம்ஆர்டி நிலையத்தை நோக்கி பயணித்ததாகவும் அவர் அதிகாரிகளிடம் கூறினார். மேலும் அந்த நபரின் உயரம் குறித்தும் அவர் தகவல் அளித்துள்ளார்.

இதனால் அதிகாரிகள் அந்த நபரின் அடையாளத்தை நிறுவ முடிந்தது, பின்னர் அவரை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். எவ்வாறாயினும், அந்த நபர் விடுத்த அச்சுறுத்தல் நம்பத்தகுந்ததாகத் தெரியவில்லை. ஏனெனில் அவரது வீட்டில் முழுமையான சோதனைகளை நடத்திய பின்னர் அவர் வைத்திருந்ததாகக் கூறும் ஆயுதங்கள் எதுவும் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்படவில்லை. சிங்கப்பூரில் Riders On Watch என்ற திட்டம் கடந்த 2019ல் டிரான்ஸ்காமின் சமூக ஈடுபாடு திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ், தன்னார்வலர்கள் சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது செயல்பாடுகளைக் கண்காணித்து, தேவைப்படும்போது காவல்துறைக்கு மதிப்புமிக்க தகவல்களை வழங்குகிறார்கள். கடந்த டிசம்பர் 11, 2021 அன்று சமூக கண்காணிப்பு திட்டம் (CWS) தொடங்கப்பட்டதிலிருந்து, Riders on Watch CWS-ன் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts