TamilSaaga

சிங்கப்பூரே வெறுக்கும் ஒரு கேவலமான “தந்தை”.. பின் பக்கத்தை நையப்புடைக்க “சவுக்கடி” தர உத்தரவு – மன்னிப்பு காட்டாத சிங்கை அரசு

சிங்கப்பூரில் ஒரு தந்தை சவுக்கடிக்கு தயார் ஆகிக் கொண்டிருக்கிறார். பின்பக்க தோலை உரிக்க பிரம்புகளும், அதிகாரிகளும் தயாராகி வருகின்றனர்.

ஆம்! USB சார்ஜர் போல தோற்றமளிக்கும் ஸ்பை கேமரா ஒன்றை வாங்கிய நபர் ஒருவர், தனது 13 வயது மகளின் நிர்வாண வீடியோக்களை பதிவு செய்வதற்காக அப்பெண்ணின் அறையில் வைத்துள்ளார்.

இதனையறிந்த அவரது மனைவி, போலீசில் புகார் அளித்தார்.

இந்நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட 43 வயதான அந்த நபருக்கு இன்று (ஏப்.20) 18 வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு அவர் ஒப்புக் கொண்டதற்காக ஒரு சவுக்கடி கொடுக்க உத்தரவிடப்பட்டது.

மேலும் படிக்க – ADP License உள்ளவர்களுக்கு சிங்கப்பூர் Changi விமான நிலையத்தில் வேலை – தினமும் 8 மணி நேர வேலை.. 2910 வெள்ளி சம்பளம்

மகளின் அடையாளத்தைப் பாதுகாக்கும் காரணமாக அந்த நபரின் பெயரைக் குறிப்பிட முடியவில்லை.

அந்த நபர் ஜூலை 2019 க்கு முன்பு உளவு கேமராவை வாங்கினார் என்று துணை அரசு வழக்கறிஞர் ஆண்ட்ரே ஓங் கூறினார்.

ஜூரோங் குடியிருப்பில் வசித்து வந்த அந்த நபர், ஜூலை 6, 2020 அன்றுகாலை 7.20 மணியளவில் தனது மகளின் படுக்கையறைக்குள் நுழைந்து அந்த சாதனத்தை அங்கு வைத்துள்ளார்.

அந்த பெண் பள்ளிச் சீருடையை அணிவதற்கு முன் நிர்வாணமாக இருந்த வீடியோக்கள் அதில் பதிவாகியுள்ளன. பின்னர் அந்த அந்த நபர் காலை 7.40 மணியளவில் Spy கேமராவை எடுத்து வந்து தனது லேப்டாப்பில் அதை பார்த்துள்ளனர்.

குற்றவாளி அந்த கிளிப்களை “தனது சொந்த மகிழ்ச்சிக்காக” பார்த்ததாக நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts