TamilSaaga

சிங்கப்பூரில் ஒரே நேர்கோட்டில் தெரிந்த 4 கோள்கள்.. வியந்து பார்த்த ஆய்வாளர்கள் – மொட்டை மாடிகளில் திரளும் மக்கள்

ஏப்ரல் 19, 2022 செவ்வாய் அன்று சிங்கப்பூரில் இருந்து சூரியக் குடும்பத்தின் நான்கு கோள்கள் நேர்த்தியான கோட்டில் காணப்பட்டது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

வியாழன், வெள்ளி, செவ்வாய் மற்றும் சனி ஆகிய நான்கு கோள்கள் தென்பட்ட அந்த புகைப்படங்கள் க்ளவுட் ஸ்பாட்டிங் & ஸ்கைஸ்பாட்டிங் சிங்கப்பூர் Facebook குழு மற்றும் பிற வானியல் பக்கங்களில் ஆன்லைனில் வெளியிடப்பட்டன.

ஸ்டார்கேசிங் சிங்கப்பூர் பேஸ்புக் பக்கத்தின்படி, செவ்வாய், வெள்ளி மற்றும் சனி ஆகியவை சிங்கப்பூரில் மார்ச் 2022 இன் பிற்பகுதியிலிருந்தே தென்படத் தொடங்கின. வியாழன் கோள் ஏப்ரல் முதல் தெரியத் தொடங்கியது.

அதிகாலை 4 மணி முதல் சூரிய உதயம் வரை இந்த கிரகங்களை வெறும் கண்களால் பார்க்க முடியும்.

மேலும் படிக்க – சிங்கப்பூரே வெறுக்கும் ஒரு கேவலமான “தந்தை”.. பின் பக்கத்தை நையப்புடைக்க “சவுக்கடி” தர உத்தரவு – மன்னிப்பு காட்டாத சிங்கை அரசு

இந்நிலையில், ஏப்ரல் 19 அன்று இந்த நான்கு கோள்களும் ஒரே நேர்க்கோட்டில் தோன்றியது.

வரும் ஏப்ரல் 23ம் தேதி சந்திரனுடன் நான்கு கிரகங்களும் இணையும்.

ஜூன் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில், சூரிய மண்டலத்தின் மற்ற கிரகங்களான புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, நெப்டியூன் மற்றும் யுரேனஸ் ஆகியவை பிறை நிலவுடன் இணைந்து இன்னும் பெரிய கிரக சீரமைப்பை உருவாக்கும்.

சிங்கப்பூரிலிருந்து நெப்டியூன் மற்றும் யுரேனஸைப் பார்க்க ஒரு ஜோடி binoculars அல்லது telescopes தேவைப்படும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts