TamilSaaga

“சிரியா.. பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு நிதியுதவி” : சிங்கப்பூரில் உள்ள தொழிலதிபருக்கு 3 வருட சிறை

சிரியாவில் பயங்கரவாத தாக்குதல்களுக்கு நிதியுதவி செய்த சிங்கப்பூர் தொழிலதிபருக்கு ஒருவருக்கு இன்று வியாழக்கிழமை (செப்டம்பர் 9) மாவட்ட நீதிமன்றத்தில் மூன்று ஆண்டுகள் மற்றும் 10 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மொஹமட் கசாலி சல்லே, இப்போது 51 வயதாகும் அவர் பயங்கரவாதம் (நிதி ஒடுக்குதல்) சட்டத்தின் கீழ் குற்றங்களை செய்ததாக ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவர் உள் பாதுகாப்புச் சட்டத்தின் (ISA) கீழ் கைது செய்யப்பட்டார்.

நீதிமன்ற ஆவணங்களின்படி, கடந்த டிசம்பர் 2013 மற்றும் 2014ம் ஆண்டின் முற்பகுதியில் மூன்று சமயங்களில், கஜாலி வான் முகமட் அகில் வான் ஜைனால் ஆபிதீன் என அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கு இவர் பணத்தை வழங்கினார்என்று தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவில் பயங்கரவாதச் செயல்களை எளிதாக்குவதற்காக அந்த பணத்தை கஜாலி வான் பயன்படுத்தியதாக தெரியவந்துள்ளது.

ஒரு சந்தர்ப்பத்தில், அவர் ஜோகூர் பாஹ்ருவில் உள்ள பேருந்து முனையத்தில் RM1,000 (385 வெள்ளி) ஐ வான் முகமது அகிலிடம் ஒப்படைத்துள்ளார். மற்ற இரண்டு நிகழ்வுகளிலும் கஜாலி முறையே சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் வெஸ்டர்ன் யூனியன் மூலம் US டாலர் 351.75 (450 வெள்ளி) மற்றும் RM500 அளித்துள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை எதிர்த்து 2002ல் சிங்கப்பூரில் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதம் (நிதி ஒடுக்குதல்) சட்டத்தின் கீழ், ஒரு குற்றவாளிக்கு ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் 5,00,000 வெள்ளி வரை அபராதமும் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts