TamilSaaga

சேவையை துவங்கியது Changi Airportன் இரண்டாவது Terminal.. வந்திறங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் – என்னென்ன வசதிகள் உள்ளது தெரியுமா?

சிங்கப்பூருக்கு Munichலிருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று, தற்போது புதுப்பிக்கப்பட்ட சாங்கி விமான நிலைய முனையம் 2க்கு (T2) வந்தடைந்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 29) அதிகாலையில் இந்த விமானம் தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை 7.12 மணிக்கு சிங்கப்பூரில் தரையிறங்கிய SQ327 விமானத்தில் இருந்த பயணிகள், புதுப்பிக்கப்பட்ட முனையத்தின் வழியாக விரைவான தானியங்கி குடியேற்ற அனுமதி மூலம் சிங்கப்பூருக்குள் நுழைந்தனர்.

புனரமைப்புக்காக கடந்த 2020 மே மாதம் இரண்டாவது முனையம் மூடப்பட்டது, அதனைத்தொடர்ந்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மக்கள் பயன்பாட்டிற்காக மீண்டும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. விசாலமான இரண்டாவது முனையத்தை கண்ட மக்கள் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

மார்ச் 2023க்குள் 2,000 பணியாளர்களை பணியமர்த்த முடிவு.. ஏற்கனவே 800 பேரை பணியமர்த்தியுள்ளோம் – சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவிப்பு!

புதுப்பிக்கப்பட்ட முனையத்தில் மொத்தம் 34 தானியங்கி குடியேற்ற பாதைகள் உள்ளன என்று சாங்கி விமான நிலைய குழு (CAG) தெரிவித்துள்ளது. குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையத்தில் (ICA) தங்கள் கருவிழி மற்றும் முக பயோமெட்ரிக்ஸைப் பதிவுசெய்த சிங்கப்பூரர்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கும் தகுதியுள்ள வெளிநாட்டுப் பார்வையாளர்களுக்கும் தானியங்கி சேவையை பயன்படுத்தினர்.

நடுவானில் Cockpitக்குள் சல்லாபம்.. மாணவியுடன் பயிற்சி விமானி எடுத்த “கீழ்த்தரமான வீடியோ” – இறுதியில் இருவருக்கும் செக் வைத்த நிறுவனம்!

மேலும் 12 குடியேற்ற பாதைகள் ICA அதிகாரிகளால் நிர்வகிக்கப்படுகின்றன என்று தகவல் வெளியாகியுள்ளது. 34 தானியங்கு பாதைகளில், ஆறு சிறப்பு உதவிப் பாதைகளாகும், அவை உடல்ரீதியாக உதவி தேவைப்படும் பயணிகளுக்கும் மற்றும் பெரிய குடும்பங்களைக் கொண்ட பயணிகளின் வசதிதிக்காக செயல்படுத்தப்படும்.

எவ்வாறாயினும், 16 தானியங்கி பாதைகள், மூன்று சிறப்பு உதவிப் பாதைகள் மற்றும் ஆறு அதிகாரிகள் கொண்ட கவுன்டர்கள் மட்டுமே இப்போது பயன்பாட்டில் இருக்கும் என்று விமான நிலைய ஆபரேட்டர் கூறினார். புதுப்பிக்கப்படுவதற்கு முன்பு, இந்த டெர்மினலில் எட்டு தானியங்கி பாதைகள் மற்றும் 16 கவுண்டர்கள் மட்டுமே இருந்தன.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts