TamilSaaga

“பிப்ரவரி 18 வெளியாகும் சிங்கப்பூர் பட்ஜெட் 2022” – இரு முக்கிய கருத்துக்களை முன்வைத்த நிதியமைச்சர் வோங்

சிங்கப்பூரில் மக்களுடைய வாழ்வாதார செலவு போன்ற “உடனடிப் பிரச்சினைகள்” குறித்த கவலைகளை நிர்வகிக்கவும், மேலும் நாட்டில் சிரமங்களை எதிர்கொள்ளும் துறைகளுக்கு ஆதரவை வழங்கவும் இந்த ஆண்டு பட்ஜெட் உதவும் என்று நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் இன்று வியாழன் (பிப்ரவரி 3) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். அவர் இந்த 2022ம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை வரும் பிப்ரவரி 18ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர்.. அதிவேகமாக கண்ணாடியில் மோதி இறந்த புறா : ஜன்னலில் பதிந்த ஆச்சு – பறவைகள் ஏன் இப்படி செய்கின்றன?

“சிங்கப்பூர் பொருளாதாரத்தின் வலுவான மற்றும் நிலையான மீட்சியின் மத்தியில் பட்ஜெட் சம்மந்தமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று திரு வோங் கூறினார். ஆனால் சிங்கப்பூரில் தற்போது வரை ஒரு சில துறைகள் தொடர்ந்து சிரமங்களை எதிர்கொள்வதை நாங்கள் அறிவோம். இந்தத் துறைகளுக்கு நிச்சயம் நாங்கள் ஆதரவை வழங்குவோம், வாழ்க்கைச் செலவு போன்ற உடனடிப் பிரச்சினைகளில் சிங்கப்பூரர்களின் கவலைகளை நிர்வகிக்கவும் நாங்கள் உதவுவோம் என்றார் அவர்.

COVID-19 தொற்றுநோய்க்குப் பிறகு சிங்கப்பூரை ஒரு “வலுவான நிலைக்கு” மாற்றும் நடவடிக்கைகளில் அரசாங்கம் “முன்னோக்கிப் பார்க்க வேண்டும்” என்று திரு வோங் கூறினார். “எதிர்காலத்திற்கான புதிய திறன்களை உருவாக்குவோம், நாங்கள் தொடர்ந்து வளர்ந்து நமது பொருளாதாரத்தை மாற்றுவோம் என்றும் வோங் கூறினார். மேலும் அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் நல்ல வேலைவாய்ப்புகளையும் உருவாக்குவோம்” என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார். “வாழ்க்கையின் சூழ்நிலைகளைச் சமாளிக்க சிங்கப்பூரர்களுக்கு அதிக உத்தரவாதத்தை வழங்க, எங்கள் சமூக ஆதரவு அமைப்பை வலுப்படுத்துவோம். நமக்காகவும் நமது வருங்கால சந்ததியினருக்காகவும் சிறந்த, மற்றும் பசுமையான ஒரு சுற்றுசூழலை உருவாக்குவதை நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம். இதன் மூலம் சிங்கப்பூரை “எங்கள் வீடு” என்று அழைப்பதில் நாம் அனைவரும் தொடர்ந்து பெருமைகொள்ளலாம்.

“இவரு தானா அந்த மச்சக்காரன்” : எல்லாரையும் காதலிச்சு தான் கல்யாணம் செய்தேன்! – 8 மனைவிகளோடு ஒரே வீட்டில் வாழும் ரியல் “ரோமியோ”

சிங்கப்பூர் சீன கலாச்சார மையம் (SCCC) மற்றும் சீன குல சங்கங்களின் சிங்கப்பூர் கூட்டமைப்பு (SFCCA) ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்திர நிகழ்வான வசந்தகால வரவேற்பு நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் இந்த கருத்துக்களை முன்வைத்தார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts