TamilSaaga

200 ஆண்டுகளுக்கு முன்பே… ஆணாதிக்கம் நிறைந்த France-ல்.. “லெஸ்பியனாக” ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்திய “பேரழகி” – கொண்டாடிய “Google”

இது 2022ம் ஆண்டு, இந்த நவநாகரீக காலத்திலும் கூட பெண் அடிமைத்தனம் என்ற ஒரு விஷயம் உலகின் ஏதோ ஒரு முலையில் இன்றளவும் இருக்கத்தான் செய்கிறது. ஆணாதிக்கமே அதற்கு காரணம் என்பதையும் நிச்சயம் நம்மால் மறுக்கமுடியாது. சரி 2022ம் ஆண்டிலேயே இந்த நிலை என்றால் சுமார் 200 வருடங்களுக்கு முன்பு இருந்த நிலையை நாம் சிந்தித்துப்பார்க்கவேண்டும்.

பெண்ணடிமைத்தமும், ஆணாதிக்கமும் அதிகம் இருந்ததாக கருதப்படும் 1800களின் தொடக்கத்தில் French நாட்டில் பிறந்தவர் தான் இந்த பதிவின் நாயகி “பேரழகி” Rosa Bonheur, உலக வரலாற்றில் போற்றப்படும் மிகச்சிறந்த பெண் ஓவியர்களில் இவரும் ஒருவர். கடந்த மார்ச் 16ம் தேதி இவருடைய 200வது பிறந்தநாளின்போது இவருடைய ஒரு ஓவியத்தை வெளியிட்டு கொண்டாடியது Googleன் Doodle.

3 பாம்புகளை முன்னே வைத்துக் கொண்டு கெத்தாக “வித்தை” காட்டிய இளைஞர் – “போடா பொடலங்கா” என்று தொடையில் போட்டுத் தள்ளிய நாகப்பாம்பு

தனது தந்தையிடம் இருந்து கிடைத்த தூண்டுதலால் ஓவியம் வரைவதில் ஈடுபாடு கட்டிய Rosa இயற்கை சார்ந்த ஓவியங்கள் குறிப்பாக மிருகங்களை கொண்ட ஓவியங்களை வரைவதில் வல்லவர். பேச பழகுவதற்கு முன்பே Rosa வரையத்துவங்கிவிட்டார் என்று அவரது தந்தை பெருமிதத்தோடு கூறுவாராம், அப்படி இருக்க அவரது 19வது வயதில் தான் Rosaவின் ஓவியம் அரங்கேறியது. அதை தொடர்ந்து எண்ணற்ற அற்புத ஓவியங்களை அவர் வரையத்துவங்கினர், 1855ம் ஆண்டு தனது 33வது வயதில் அவர் வரைந்த The Horse Fair என்ற 8 அடி நீளம் கொண்ட ஓவியம் Rosaவிற்கு உலக அளவில் மிகப்பெரிய அளவில் புகழை தேடித்தந்தது.

முன்பு கூறியதைப்போல ஆணாதிக்கம் அதிகம் இருந்த காலத்திலேயே ஆண்களின் உடை அணிந்து செல்வதை விரும்பியுள்ளார் Rosa. தான் ஒரு விலங்குகள் சார்ந்த ஓவியர் என்பதால் ஆண்கள் அணியும் ஆடை தனக்கு பொருத்தமாக இருக்கும் என்றும் அவரே பலமுறை கூறியுள்ளாராம். இதுமட்டுமல்லாமல் 1865ம் ஆண்டு அவருக்கு பிரெஞ்சு அரசால் Legion of Honor என்ற மிக உயரிய விருது அளிக்கப்பட்டுள்ளது. இந்த பெருமையை பெற்ற முதல் பெண்ணும் அவர்தான்.

அவருடைய ஓவியக் கலை ஒருபுறம் இருக்க, Rosalie தான் காதலித்த பெண்ணோடு இணைந்து வாழ்ந்துள்ளார். ஆம் Rosalie ஒரு தன்பாலின ஈர்ப்பாளர், சுருங்கச்சொன்னால் அவர் ஒரு Lesbian, பெண்கள் வெளியில் நடமாடுவதே கடினம் என்றால் Lesbian பெண்ணொருத்தி தனக்கு பிடித்த பெண்ணோடு ஒன்றாக வாழ்ந்துள்ளார் என்றால் நிச்சயம் மனஉறுதியின் உச்சத்தில் அவர் இருந்திருக்க வேண்டும். ஆண் ஓவியர்களுக்கு நிகராக பல சிறப்பான ஓவியங்களை வரைந்து தனக்கு பிடித்த பெண்ணுடன் வாழ்ந்து எண்ணற்ற பல விருதுகளை பெற்ற Rosalie 1899ம் ஆண்டு மே மாதம் இந்த மண்ணை விட்டு மறைந்தார்.

“ஹெல்ப் பண்ணுங்க”.. சிங்கப்பூரில் விபத்தில் சிக்கிய தந்தை ICU-வில் – CCTV இல்லாததால் மக்களின் உதவியை நாடும் மகள்

ஆண்டுகள் பல கடந்தும் இன்றளவும் அவருடைய ஓவியங்கள் பிரெஞ்சு அரசால் பாதுகாக்கப்பட்டு மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. பேரழகி என்ற பட்டத்தை அவர் பெறவில்லை என்றாலும் இன்றளவும் அவருடைய தன்னிகரற்ற ஓவியங்கள் அவரை ஒரு “பேரழகியாக” மாற்றியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts