TamilSaaga

சிங்கப்பூர்.. அதிவேகமாக கண்ணாடியில் மோதி இறந்த புறா : ஜன்னலில் பதிந்த அச்சு – பறவைகள் ஏன் இப்படி செய்கின்றன?

சிங்கப்பூரில் ஒரு குடியிருப்புப் பிரிவின் கண்ணாடி ஜன்னலில் மோதியதால், பறவை ஒன்று தரையில் அசையாமல் இறந்து கிடந்தது. இறந்த அந்த பறவையின் புகைப்படம் மற்றும் ஜன்னலில் அந்த பறவை மோதிய தாக்கத்தால் ஏற்பட்ட ஆச்சு ஆகியவை அந்த வீடியோவில் இருந்தது. Singapore Wildlife Sightings என்ற முகநூல் பக்கத்தில் தான் கடந்த ஜனவரி 30 அன்று இந்த காணொளி பதிவேற்றப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தில் இறந்து கிடந்தது ஒரு Pnik-Necked பச்சை புறா என அடையாளம் காணப்பட்டுள்ளது.

“ஆவணங்களை” வீட்டிலேயே வைத்துவிட்டு சென்ற சிங்கப்பூர் பெண்” : ஜோகூர் ஆற்றில் பிணமாக மிதந்த மர்மம் – என்ன நடந்தது?

அதன் கண்கள் திறந்த நிலையில் தலை ஒரு பக்கமாக சாய்ந்திருந்தது காண்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது. அதே போல அந்த பறவை கண்ணாடி ஜன்னலில் மோதியிருக்கும் துல்லியமான இடத்தை வீடியோ காட்டியது, ஏனெனில் அதன் உடல் அச்சு, அதன் இறக்கைகளின் வெளிப்புறத்தை தெளிவாகக் அந்த வீடியோவில் காண முடிந்தது. Pnik-Necked பச்சை புறா என்பது சிங்கப்பூரில் மிகவும் பொதுவான பறவை இனங்களில் ஒன்றாகும்.

இருப்பினும், அவை சாதாரண புறாக்களை விட குறைந்த அளவிலேயே காணப்படுகின்றன, ஏனெனில் Pink-Necked பச்சை புறாக்கள் மரங்களில் வாழ்கின்றன, மேலும் தண்ணீர் அருந்த மட்டுமே தரைக்கு வரும் என்றும் பிற நேரங்களில் அவை அரிதாகவே தரையில் காணப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த இனத்தின் ஆண் புறா, பெண்ணுடன் ஒப்பிடும்போது, ​​அதிக அளவில் நிறமுள்ளதாக இருக்கும் என்று பறவைகள் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

ஆல் அபவுட் பேர்ட்ஸ் இணையதள ஆதாரத்தின்படி, பகல் நேரத்தில், பறவைகள் ஜன்னல்களில் மோதுகின்றன, ஏனெனில் அவை தாவரங்களின் பிரதிபலிப்பைப் அதில் பார்க்கின்றன அல்லது கண்ணாடி வழியாக மறுபுறத்தில் உள்ள செடிகள் அல்லது தாவரங்களை அவை பார்க்கின்றன. இந்நிலையில் ஜன்னலின் வெளிப்புறப் பரப்பில் பறவைகள் மோதுவதைத் தடுக்க ஸ்டிக்கர்கள், சன் கேட்சர்கள், டேப்புகள் அல்லது வேறு பொருட்களை ஒட்டலாம் என்றும் அந்த செய்தித் தளம் கூறியது.

“இனி எந்த கவலையும் வேண்டாம்” : Changi Airportன் மூன்று புதிய முன்னெடுப்புகள்” : பயனடையப்போவது யார் தெரியுமா?

சிங்கப்பூரில், பறவைகள் மற்றும் விலங்குகள் அடிக்கடி ஜன்னல்கள் மற்றும் கட்டிடங்களில் மீது கூட மோதியதாகக் கூறப்படுகிறது. காக்கி புக்கிட்டில் ஒரு ஆந்தை இதுபோல மோதிய சம்பவம் நடந்துள்ளது. கடந்த பிப்ரவரி 2021ல், உலு பாண்டனில் உள்ள மூன்றாவது மாடி குடியிருப்பின் ஜன்னல் வழியாக ஒரு சேவல் மோதியது அந்த வீட்டிற்குள் நுழைந்தது, இதனால் அந்த குடியிருப்பின் கண்ணாடிகள் உடைந்தது ஒருபுறம் இருந்தாலும் அந்த சேவலும் அந்த மோதலின் பாதிப்பால் இறந்தது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts