TamilSaaga

சிங்கப்பூரில் SPassல் ஏதோ ஒரு வேலை… படிப்புக்காகலாம் வேணாம் என நினைக்கும் நபரா நீங்க… ஒரு நிமிஷம்… நீங்க அறியாத S-Passன் உண்மை முகம் இப்படி தான் இருக்கும்

சிங்கப்பூரில் எக்கசக்க சம்பளத்தினை அள்ளி தரும் SPass. இந்த எண்ணம் தான் பலருக்கும் இருக்கிறது. ஆனால் இந்த வகை வொர்க் பாஸில் சில பிரச்னைகளும் இருக்கிறது. அதை தெரிந்து கொண்டு இனி S Passக்கு அப்ளே செய்யுங்கள்.

எப்போதுமே SPass பெரிய பெரிய வேலைகளுக்கு மட்டும் கொடுக்கப்படாது. இந்தியாவில் நீங்க சின்ன வேலைகள் என நினைக்கும் சில வேலைகளுக்கு கூட சிங்கப்பூரில் SPass வழங்கப்பட்டு வருகிறது. டிகிரி படித்துவிட்டு இங்கு வந்து சின்ன வேலைகளில் செட்டில் ஆகிக்கொண்டு பின்னர் வேறு நல்ல வேலையை தேடலாம் என்பதே பலரின் எண்ணமாக இருக்கும்.

இந்த மாதியில் SPassல் வேலை செய்து கொண்டிருக்கும் போது சில பிரச்னைகளால் ஊழியர்கள் நிறுவனங்களில் போடப்பட்ட வேலை ஒப்பந்த காலம் முடியும் முன்னரே கேன்சல் செய்து விட்டு இந்தியா திரும்பிவிடுவார்கள். இவர்களின் SPassஐ அந்தந்த நிறுவனமும் கேன்சல் செய்து விடும்.

இதனால் அவர்களால் மீண்டும் சிங்கப்பூரில் இந்த பாஸ்களில் வேலை வாங்குவது முடியாத காரணமாக இருக்கும். ஏனெனில், பாதியில் கேன்சல் செய்யப்பட்ட இந்த வகை SPassக்கு உரிய ஊழியருக்கு மீண்டும் SPassஐ Mom அப்ரூவ் செய்ய மறுக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் முடிந்தவரை சிங்கப்பூர் வேலைக்கு வரும் போதே எல்லா தகவல்களையும் சரியாக கேட்டுக்கொள்ளுங்கள்.

அதைப்போல வேலைக்கு வந்தபிறகு முடிந்த வரை வாலிடிட்டி காலம் வரை இந்தியா திரும்பாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். SPassல் சில நூறு சிங்கப்பூர் டாலர்கள் அதிக சம்பளம் கொடுப்பது என்னவோ உண்மை தான். ஆனால் இந்த பாஸில் வருபவர்களுக்கும் வேலை அதிகமாகவே இருக்கும்.

S-Passல் வேலைக்கு சென்று இந்தியா திரும்பிவிட்டால் மீண்டும் சிங்கப்பூர் வர கஷ்டமாக இருக்கும்.

*Logistics
*Car Wash
*Hotel
*Grocery Shops
*Cleaning Jobs
*SuperMarket

இந்த வேலைகளில் கூட SPass ஊழியர்கள் எடுக்கப்படுவார்கள். பெரும்பாலும் இந்த பாஸில் வரும்போது ஷிப்ட் வைத்து வேலைக்கு எடுப்பார்கள். 12 மணி நேரம் வேலையாக இருந்தால் OT பார்க்க முடியாது. 8 அல்லது 9 மணி நேர வேலையில் இருக்கும் போது OT பார்க்க சரியாக இருக்கும்.

மேலும் இந்த வேலைகளில் இருப்பவர்களுக்கு டிப்ஸ் கிடைக்கும். ஆனால் இந்த வேலைகளில் இருப்பவர்கள் இந்தியா போய் சிங்கப்பூர் திரும்ப நேரம் எடுத்தால் உங்களின் பாஸை கேன்சல் செய்து விடுவார்கள். அப்படி இருக்கும் போது, உங்களால் இதே வேலைக்கு போக முடியாது. ஏற்கனவே நீங்க வேலை செய்த முதலாளி உங்களை refer செய்யும் பட்சத்தில் வேண்டும் என்றால் அதே கடைகளில் வேலை கிடைக்கும்.

சிங்கப்பூர் வந்து சில காலம் வேலை செய்து விட்டு நல்ல வேலைக்கு மாறிவிடலாம் என்ற நம்பிக்கையில் இன்ஜினியரிங் படித்த பல இளைஞர்கள் கூட கார் துடைப்பதும், மளிகைக்கடையில் வேலை செய்வது நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதுவே கன்ஸ்ட்ரெக்‌ஷன் மற்றும் எலக்ட்ரிக்கல் துறைகளில் ஒரு கம்பெனியில் இல்லை என்றால் கூட இன்னொரு கம்பெனிக்கு பார்த்து வேலைக்கு சென்று விடலாம். ஆனால் இதைப்போன்ற வேலைகளுக்கு ஒன்று இல்லை வேறு என மாறுவது முடியாத காரியம் தான். அதனால் பெரும்பாலும் நீங்க படித்த படிப்பிலேயே வேலைக்கான பாஸ் வாங்கி வருவது சிறந்தது.

Related posts