TamilSaaga

சிங்கப்பூரில் வேலைக்காக EPass இருக்கு தெரியும்.. அதென்னப்பா PE Pass… மாதம் இத்தனை லட்சத்தில் சம்பளமா? அம்மாடி! தெரிஞ்சிக்கோங்க உங்களுக்கு கூட கிடைக்கலாம்!

சிங்கப்பூரில் வேலைக்காக இருக்கும் பல பாஸ்கள் குறித்தும் அதற்கான singapore job vacancy குறித்தும் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில், ஒன்று நாம் பார்க்க இருப்பதும் நீங்க அறிந்திராமல் இருக்கும் ஒருவகை பாஸ் குறித்து தான். இந்த பாஸ் குறித்து நீங்க தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் தான் இங்கு உள்ளது.

அதிக வருமானம் ஈட்டும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்டு வரும் பாஸ் தான் Personalised Employment Pass. இந்த பாஸ் வைத்திருக்கும் ஊழியர்கள் மற்ற வேலை பாஸ்களைக் காட்டிலும் அதிகமாக இறுக்கமான சூழ்நிலை இல்லாமல் வேலை பார்க்க முடியும். இருப்பினும், அவர்கள் இந்த பாஸ் வைத்திருக்க சில தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியதும் அவசியமாகிறது.

இதையும் படிங்க: சிங்கையில் இருக்கும் தமிழரா நீங்க… SingPass ஓபன் செய்வது எப்படி… இதற்கு Eligibleஆக என்ன செய்யணும்?

ஒரு வெளிநாட்டு ஊழியர் கடைசியாக பெறப்பட்ட மாத சம்பளம் குறைந்தது 18,000 சிங்கப்பூர் டாலர் இருந்திருக்க வேண்டும். ஏற்கனவே EPassல் இருக்கும் ஊழியர்கள் குறைந்தபட்சம் $12,000 நிலையான மாதச் சம்பளம் பெற்று இருக்க வேண்டும்.

செப்டம்பர் 1, 2023 முதல், தற்போது EP வைத்திருப்பவர்கள் மற்றும் வெளிநாட்டுப் பணியாளர்கள் இருவருக்கும் நிலையான மாதச் சம்பள அளவுகோல் $22,500 சிங்கப்பூர் டாலராக உயர்த்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாருக்கெல்லாம் PEP கிடைக்காது?

  • ஸ்பான்சர்ஷிப் மூலம் E பாஸ் வைத்திருப்பவர்கள்.

*ஃப்ரீலான்ஸ் அடிப்படையில் வேலை செய்ய விரும்பும் ஃப்ரீலான்ஸர் அல்லது வெளிநாட்டவர்.

*ACRA-பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தில் பங்குதாரராகவும், உரிமையாளராகவும் இருப்பவர்கள்.

*பத்திரிகை துறையை சேர்ந்தவர்கள்

PEP இல் இருக்கும்போது நீங்கள் ஒரு தொழிலைத் தொடங்கவோ அல்லது எந்த வகையான தொழில் முனைவோர் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவோ ​​உங்களுக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கோடி ரூபாயில் சிங்கப்பூரில் வேலை வாங்கி தருகிறேன்… 1.75 லட்சம் மட்டும் போதும்… நண்பருக்கே டிமிக்கி கொடுத்த ஆசாமி… கொத்தாக தூக்கிய தமிழ்நாட்டு காவல்துறை

PEP இன் தேவைகள்

*PEPல் இருக்கும் போது 6 மாதங்களுக்கு மேல் சிங்கப்பூரில் வேலையில்லாமல் இருக்க வேண்டாம். இல்லையெனில், நீங்கள் பாஸை ரத்து செய்ய வேண்டும்.

*நீங்கள் வேலையில் இருக்கும் மாதங்களின் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல், ஒரு காலண்டர் வருடத்திற்கு குறைந்தபட்சம் $144,000 நிலையான சம்பளத்தைப் பெற வேண்டும்.

*நீங்கள் பொதுவாக எந்தத் துறையிலும் வேலை செய்யலாம். இருப்பினும், மருத்துவம், பார்மஸி, சிவில், சட்டம் போன்ற தொழில்களில் சிங்கப்பூரில் பயிற்சி பெற வேண்டும் என்றால் கட்டாயம் ரிஜிஸ்டர் செய்திருக்க வேண்டும். இதற்கு PEP உங்களுக்கு விலக்கு அளிக்காது.

*நீங்கள் வேலை மாறினால் புதிய பாஸுக்கு மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. ஊழியர்கள் தரப்பில் இருந்து momக்கு மட்டும் அறிவித்து விட வேண்டும்.

*புதிய வேலையை தேட வேலை இல்லாமல் 6 மாதங்கள் வரை மட்டுமே சிங்கப்பூரில் தொடர்ந்து தங்கலாம்.

இதற்கான அப்ளிகேஷனை சப்மிட் செய்யும் போது உங்களிடம் 105 சிங்கப்பூர் டாலர்கள் கேட்கப்படும். அப்ளிகேஷம் அப்ரூவாக சுமார் 8 வாரங்கள் வரை ஆகும். அப்ரூவானவுடன் 225 சிங்கப்பூர் டாலர்கள் கேட்கப்படும். இதன்பின் எல்லா பாஸ்கள் போல IPA கிடைத்தவுடன் சிங்கப்பூர் வந்துவிடலாம். அதன்பின்னர், MOMல் கைரேகை மற்றும் போட்டோவெல்லாம் சமர்பித்தபின்னர் கார்ட் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts