TamilSaaga

“அடுத்த நாள் VTL பயணம்” : மகனை ஆவலோடு எதிர்பார்த்த தந்தை – ஆனால் சிங்கப்பூரிலிருந்து சடலமாக சென்ற மகன்!

சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர் ஒருவர், தடுப்பூசி போடப்பட்ட பயணப் பாதையை (VTL) பயன்படுத்தி வீடு திரும்புவதற்கு ஒரு நாள் முன்பு, Tampinesல் ஏற்பட்ட ஒரு சாலை விபத்தில் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வியாழன் (பிப்ரவரி 24) அதிகாலை Tampines Avenue 1ல் இந்த விபத்து ஏற்பட்ட போது 36 வயதான அந்த மலேசிய வெல்டிங் டெக்னீஷியன் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார் என்று Shin Min Daily News செய்தி வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூரில் “இந்த” படிப்பு படித்த இந்தியர்களுக்கு “லட்சக்கணக்கில்” சம்பளம்.. படையெடுக்கும் இளைஞர்கள் – NodeFlair மற்றும் Quest Ventures அறிக்கை

வாகனத்தில் சென்றுகொண்டிருந்த திரு. முகமது சைஃப்புல், 72 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையைக் கடப்பதைத் தவிர்க்க முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது அவர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்த வயதான பாதசாரியும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தி நியூ பேப்பருக்கு தொலைபேசி மூலம் அளித்த பேட்டியில், இறந்த அந்த மலேசியரின் தந்தை பேசியபோது “முதலில் எனது மகனுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது என்று மட்டும் தான் எனக்கு செய்தி கிடைத்தது. ஆனால் அதற்கு பிறகு தான் அவன் இறந்துவிட்டான் என்ற செய்தி கிடைத்து” என்று கூறினார். விவாகரத்து பெற்ற தனது மகன், குடும்பத்தை நடத்துவதற்காக சுமார் ஐந்து ஆண்டுகளாக சிங்கப்பூரில் வேலை செய்து வருவதாக அவர் கூறினார். அப்பா என்று அன்போடு அழைத்துக்கொண்டு வீடு திரும்புவான் என்று எண்ணினேன். ஆனால் அவர் சவப்பெட்டியில் தான் வீடு திரும்பியுள்ளான் என்று கனத்த குரலில் அவர் கூறியுள்ளார்.

திரு சைஃபுலின் நண்பர்கள் தொண்டு நிறுவனமான 1ThirdMedia Movement உதவியோடு அவரது இறுதி ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். பிப்ரவரி 24 அன்று, டோவா பயோவில் உள்ள சிங்கப்பூர் ஃபியூனரல் சர்வீஸிலிருந்து துவாஸ் சோதனைச் சாவடிக்கு அவரது சடலத்துடன் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்கள் அணிவகுத்தது சென்றது. பட்டு பஹாட்டில் உள்ள ஒரு கல்லறையில் அவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சிங்கப்பூரில் “கக்கா” போய்ட்டு ஃபிளஷ் பண்ணாம வந்தா என்ன தண்டனை தெரியுமா? பதற வைக்கும் “Toilet” விதிமுறைகள்!

தனது மகனின் உடலை நல்லடக்கம் செய்ய உதவிய நண்பர்களுக்கும் அந்த தொண்டு நிறுவனத்திற்கும் திரு ரஹ்மான் நன்றிகளை தெரிவித்துள்ளார். “என்னுடைய மகன் நல்ல உடல் நலத்தோடு பல ஆண்டுகள் வாழவேண்டும். பலராலும் அவன் நேசிக்கப்படவேண்டும், அவனை நல்ல முறையில் கவனித்துக்கொள்ளவேண்டும் என்றெல்லாம் எண்ணினேன். ஆனால் இப்போது அல்லாஹ்விடம் அவன் இருக்கிறான் என்பதை நான் அறிவேன் என்றார் அந்த தந்தை.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts