TamilSaaga

KTV கிளஸ்ட்டர்.. உங்களை போல நானும் விரக்தியில் உள்ளேன் – நிதி அமைச்சர் லாரன்ஸ்

“கேடிவி குழுமத்தில் சமீபத்தில் கண்டறியப்பட்ட கோவிட் -19 வழக்குகள் குறித்து பலர் ஏமாற்றத்தையும் விரக்தியையும் அனுபவிப்பதை நான் அறிவேன். நானும் அவ்வாறே உணர்கிறேன்”. இது சிங்கப்பூரின் நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் தனது முகநூலில் வெளியிட்ட பதிவு.

சிங்கப்பூரில் பல நாட்களாக தொற்று எண்ணிக்கை சொற்ப அளவிலேயே பதிவான நிலையில் சில தினங்களுக்கு முன்பு KTV குழுமத்தில் ஏற்பட்ட தவறினால் அதிக அளவில் தற்போது சிங்கப்பூரில் தொற்று பதிவாகி வருகின்றது.

கேடிவி கிளஸ்டரைக் குறித்த கூடுதல் நடவடிக்கைகள் குறித்து எம்டிஎஃப் ஆலோசித்து வருவதாகவும், விரைவில் அதுகுறித்த அப்டேட் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த கேடிவி ஓய்வறைகளுக்குச் சென்ற அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றார்.

நேற்று ஜூலை 15ம் தேதி, பிற்பகல் வெளியான கொரோனா நிலவரப்படி 33 புதிய கோவிட் -19 வழக்குகள் கேடிவி கிளஸ்டருடன் இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts