TamilSaaga

“வால சுருட்டிக்கோங்க; இல்லனா ஒட்ட நறுக்கப்படும்” : சிங்கப்பூரில் கடுமையாகும் பாலியல் குற்றங்களுக்கான தண்டனை – தரமான சம்பவம்

சிங்கப்பூர் – பாலியல் குற்றங்களுக்கான அபராதங்கள் மற்றும் மற்றும் தண்டனைகள் அதிகரிக்கப்படுவதால், இனி பாலியல் ரீதியான குற்றங்களில் ஈடுபடுபவர்களை நீதிமன்றங்கள் நாளை செவ்வாய்க்கிழமை (மார்ச் 1) மிகக் கடுமையாகக் கையாள முடியும். ஆகவே இனி வாலை சுருட்டிக்கணும், இல்லனா சிங்கப்பூர் ஓட்ட நறுக்கிவிடும் என்று தான் ஓப்பனாக கூற வேண்டும். குற்றவியல் சட்டம் (இதர திருத்தங்கள்) சட்டம் 2021 கடந்த ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

“அடுத்த நாள் VTL பயணம்” : மகனை ஆவலோடு எதிர்பார்த்த தந்தை – ஆனால் சிங்கப்பூரிலிருந்து சடலமாக சென்ற மகன்!

இந்தத் திருத்தங்கள் பாலியல் குற்றங்களுக்கான தண்டனைகளை அதிகரிக்கின்றன, சிங்கப்பூரை பொறுத்தவரை கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமை மற்றும் வழிப்பறி வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சமீபத்திய வருடாந்திர புள்ளிவிவரங்களின்படி, 2021ல் 1,480 கற்பழிப்பு வழக்குகள் இருப்பதாகவும், 2020ல் 1,321 வழக்குகள் மட்டுமே இருந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் 2020ல் 394 ஆக இருந்த Voyeurism வழக்குகள் கடந்த ஆண்டு 467 ஆக உயர்ந்துள்ளது. அடுத்தவங்க குளிப்பதை எட்டிப்பார்பது, அந்தரங்க விஷயத்துல மூக்கை நுழைகிறது, இதைத் தான் Voyeurism என்று கூறுகின்றனர்.

சிங்கப்பூரின் உள்துறை அமைச்சகம் மற்றும் சட்ட அமைச்சகத்தின் கூட்டு வெளியீடு அறிவிப்பின்படி நாளை செவ்வாய்கிழமை முதல் பல திருத்தங்கள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் சீண்டலில் ஈடுபடுபவர்களுக்கான அதிகபட்ச சிறைத் தண்டனையை தற்போதைய இரண்டில் இருந்து மூன்று ஆண்டுகளாக அதிகரிப்பது இதில் அடங்கும். மற்ற பாலியல் குற்றங்களுக்கான அதிகபட்ச தண்டனையும் செவ்வாய்க்கிழமை முதல் உயர்த்தப்பட்டு, சிறார்களை உள்ளடக்கிய குற்றங்களுக்கு தற்போதுள்ள அதிகபட்ச தண்டனைகளுக்கு இணையாக இருக்கும்.

மேலும் 14 முதல் 16 வயதுடைய மைனர் முன்னிலையில் ஏதேனும் பாலியல் செயலில் ஈடுபட்டாலோ அல்லது அந்த நபருக்கு பாலியல் படத்தைக் காண்பித்தாலோ அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். மைனர் 16 முதல் 18 வயதுடையவராகவும், குற்றவாளி அவர்களிடம் தவறான உறவில் இருந்தாலும், அதிகபட்ச சிறைத்தண்டனையும் தற்போது உள்ளதை விட இரண்டு ஆண்டுகள் அதிகமாக இருக்கும். இதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் பேசிய சட்ட அமைச்சர் கே.சண்முகம், சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கான தண்டனைகள் மறுபரிசீலனை செய்யப்படும் என்றார்.

“யாரோ செய்த தவறு” : சிங்கப்பூரில் தர்பூசணியால் ஏற்பட்ட சோகம் : என்னோட வருமானமே போச்சு, புலம்பும் ஓட்டுநர்!

மேலும் பல பாலியல் ரீதியான குற்றங்களுக்கு தண்டனைகள் மேலும் கடுமையாக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts