TamilSaaga

தொடங்கியாச்சு புதிய Financial Year.. சிங்கப்பூரில் மினிமம் $5000 டாலர் சம்பளத்தை அள்ளிக்கொடுக்கும் Pass… இந்த ஏப்ரல் மாதம் விண்ணப்பித்தால் வேலை உடனே கிடைக்க அதிக வாய்ப்பு!

SINGAPORE: சிங்கப்பூரில் நல்ல சம்பளம் வாங்க வேண்டுமெனில், நீங்கள் தேர்வு செய்ய வேண்டியது EPass. இந்த பாஸினை எப்படி வாங்கலாம்? இதற்கு விண்ணப்பிக்க என்னென்ன டாக்குமெண்ட்ஸ் தேவை? இப்போது ஏன் இதனை விண்ணப்பிக்க வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிங்க.

EP என்பது சிங்கப்பூரின் மனிதவள அமைச்சகத்தால் வெளிநாட்டு ஊழியர்கள், மேலாளர்கள் மற்றும் சிங்கப்பூர் நிறுவனங்களின் உரிமையாளர்கள் அல்லது இயக்குநர்களுக்கு வழங்கப்படும் விசா ஆகும். இந்த விசாவில் சிங்கப்பூரில் வசிக்கவும் வேலை செய்யவும் உங்களை அனுமதிக்கிறது. EP வைத்திருப்பவர்களுக்கு EntryPass இல்லாமல் நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் பயணம் செய்ய அனுமதிக்கிறது.

இந்த பாஸ் பொதுவாக 1 முதல் 2 ஆண்டுகள் வரை தான் செல்லுபடியாகும். அதன் பிறகு Renewal செய்து கொள்ளலாம். E Passல் சிங்கப்பூர் வந்திருப்பவர்கள் PR விண்ணப்பிப்பது சுலபமானது. முதலில் EPass அப்ளை செய்யும் ஊழியர் பாஸ்போர்ட்டின் பெர்சனல் விவரம் அடங்கிய பக்கத்தின் ஜெராக்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள். பாஸ்போர்ட்டில் உள்ள ஊழியரின் பெயரில் எதும் மாற்றம் இருந்தால் ஒரு விளக்கக் கடிதம் மற்றும் அதற்குரிய டாக்குமெண்ட்ஸ் வைத்திருக்க வேண்டும்.

அடுத்து, Educational டாக்குமெண்ட்ஸ் வைத்திருக்க வேண்டும். படித்த கல்லூரியைக் குறிப்பிடும் அனைத்து செமஸ்டர்களுக்கான சர்ட்டிபிகேட்ஸ் இருக்க வேண்டும். இந்த டாக்குமெண்ட்ஸ் வைத்து Epass விண்ணப்பத்தை செக் செய்யும் போது மற்ற சில சர்ட்டிபிகேட்ஸும் குறிப்பிட்ட சிலருக்கு கேட்கப்படும். நோட்டரி பப்ளிக் மூலம் சான்றளிக்கப்பட்ட educational documents ஏற்றுக்கொள்ளப்படாது.

சிங்கை மண் தரையில் அமர்ந்து உணவு உண்ணும் தொழிலாளிகள்… ஒரு மேசை கூட கொடுக்க கூடாதா? நிம்மதியாக சாப்பிட விடுங்கள்…

மேலும், நீங்கள் குறிப்பிட்ட சில துறைகளில் வேலைக்கு சேரும் போது அந்த துறைக்குரிய நிறுவனத்திடம் இருந்து Documents வாங்க வேண்டும். பல் மருத்துவர் வேலைக்கு சிங்கப்பூர் பல் மருத்துவ கவுன்சிலில் இருந்து Document வாங்க வேண்டும். ரேடியோகிராஃபர் Allied Health Professions கவுன்சிலிடம் இருந்தும், Doctorகள் சிங்கப்பூர் மருத்துவ கவுன்சிலிடம் இருந்தும் Document வாங்கி இருக்க வேண்டும்.

Unit for Prehospital Emergency Care-டம் இருந்து அவசர மருத்துவ டெக்னிசீயன்கள் Document வாங்கி இருக்க வேண்டும். கால்பந்து வீரர் அல்லது பயிற்சியாளர் ஸ்போர்ட் சிங்கப்பூரிலும், வழக்கறிஞர் சட்ட சேவைகள் ஒழுங்குமுறை ஆணையத்திடம் இருந்தும், செவிலியர் சிங்கப்பூர் நர்சிங் வாரியத்திடம் இருந்தும், Occupational therapist, Physiotherapist, Radiation therapist, Speech therapist ஆகியோர் Allied Health Professions கவுன்சிலிடம் Document வாங்கி இருக்க வேண்டும்.

சிங்கப்பூர் உணவு நிறுவனம் (SFA) வழங்கிய உணவுக்கடை உரிமத்தின் நகலை அங்கு வேலை செய்ய EPass அப்ளே செய்ய சமர்பிக்க வேண்டும். நீங்கள் வேலை செய்வது புதிய ஸ்தாபனமாக இருந்தால், இன்னும் உரிமம் இல்லை என்றால், SFAஆல் உங்களுக்கு வழங்கப்பட்ட “ஃபுட்ஷாப் உரிமத்திற்கான அப்ளிகேஷன்” கடிதத்தின் நகலை நீங்கள் சமர்ப்பிக்கலாம். இதன்மூலம் நீங்கள் EPassக்கு விண்ணப்பித்தால் கண்டிப்பாக கிடைக்கும்.

எல்லாவற்றுக்கும் மேலாக வரும் 2024ம் ஆண்டுக்கான Financial Year.. அதாவது நிதியாண்டு துவங்கியுள்ளதால் சிங்கப்பூரின் பல நிறுவனங்கள் தற்போது பல்வேறு துறைகளில் பல புதிய ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளன. எனவே அதனை கருத்தில் கொண்டு, இப்போதே E-பாஸ்-க்கு விண்ணப்பிக்க நீங்கள் முயற்சி மேற்கொள்ளலாம்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts