VTL திட்டத்தின் கீழ் மூடப்பட்டிருந்த தனது எல்லைகளை, படிப்படியாக ஒவ்வொரு நாடுகளுக்காக சிங்கப்பூர் திறந்து வருவது அனைவரும் அறிந்ததே. அந்த வரிசையில் நவம்பர் 29ஆம் தேதி முதல் இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்குமான பயணிகள் விமான சேவைக தொடங்கவிருப்பதாக கடந்த ஞாயிறு அன்று சிங்கப்பூர் விமான போக்குவரத்து ஆணையம் CAAS அறிவித்திருந்தது. அந்த தடுப்பூசி பயணப்பாதை VTL திட்டத்தில் பயணிப்பதற்கான விண்ணப்பங்கள் VTP கடந்த நவம்பர் 22 சிங்கப்பூர் நேரப்படி மாலை 6 மணியிலிருந்து வழங்கப்பட்டு வருகின்றது.
இதையும் படியுங்கள் : VTPக்கு “Apply” செய்வது எப்படி? – Detailed Report
இந்த பயணிகள் விமான சேவை தொடங்கப்படுவதைத் தொடர்ந்து வணிக ரீதியிலான விமான சேவைகளும் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த நவம்பர் 18ஆம் தேதியன்று மூன்று நாள் அரசு முறை பயணமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு . ஜெய்சங்கர் அவர்கள் சிங்கப்பூர் சென்று சிங்கப்பூரின் தலைமை அமைச்சர் திரு . லீ மற்றும் சிங்கப்பூரின் மூத்த அமைச்சர்கள், அனைத்து தமிழ் அமைச்சர்கள் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது விரைவில் வணிக ரீதியிலான விமான சேவைகள் சிங்கப்பூருக்கும் இந்தியாவிற்கும் தொடங்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பல நாட்களாக இந்திய பயணிகள் எதிர்பார்த்த அந்த செய்தி தற்போது வெளியாகியுள்ளது. SIA எனப்படும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தனது சேவைகளை வரும் 29ம் தேதி முதல் சென்னை, டெல்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் இருந்து தொடங்கவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்த விமான சேவை நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
மேலும் இந்தியாவின் மேலும் சில நகரங்களில் இருந்து VTL அல்லாத பயணிப்பதை சேவைகளையும் SIA இயக்கவுள்ளது.