TamilSaaga

“சிங்கப்பூரை சார்ந்த தொழிலாளர்கள்” – மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

நமது சிங்கப்பூரை சேர்ந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) தனது சிங்கப்பூர் சார்ந்த ஊழியர்களின் monthly variable component எனப்படும் MVC ஊதியக் குறைப்பை நிறுத்தியுள்ளது. இது கடந்த ஆண்டு கோவிட் -19 காரணமாக நிறுவனத்தின் வருவாய் வீழ்ச்சியடைந்ததால் குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 13), SIA செய்தித் தொடர்பாளர் சிஎன்ஏவிடம் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் MVC பிடிப்பை நிறுத்திவிட்டதாக கூறினார்.

இருப்பினும், விமானிகளின் மேலதிக வேலை இழப்புகளைத் தணிக்க கடந்த ஆண்டு செப்டம்பரில் ஏர்லைன் பைலட்ஸ் அசோசியேஷன் – சிங்கப்பூர் (ALPA -S) தொழிற்சங்கத்துடனான ஒப்பந்தத்தின் படி விமானிகளுக்கான கூடுதல் ஊதியக் குறைப்பு நீடிக்கும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.

மூத்த நிர்வாகிகளுக்கான அடிப்படை சம்பளத்தில் கூடுதல் ஊதியக் குறைப்புகளைத் தொடரும் என்றும். மூத்த துணைத் தலைவர்களுக்கு 15 சதவிகிதம், நிர்வாக துணைத் தலைவர்களுக்கு 20 சதவிகிதம் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிக்கு 25 சதவிகிதம் என்றும் குறைக்கப்படும் என்றும் தகவல் தெரிவிக்கின்றது.

நிர்வாகக்குழுவுக்கு ஆதரவாக, வாரிய உறுப்பினர்கள் கட்டணத்தில் 30 சதவிகிதம் குறைப்பைத் நிர்வாகம் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts