இந்திய மக்களின் ஆகச்சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களாக எப்போதும் முதலில் இருப்பது கிரிக்கெட் மற்றும் சினிமா தான்.
கிரிக்கெட்டில் தோனிக்கு பிறகு தற்போது உச்சத்தில் இருக்க கூடிய மக்கள் விரும்பும் நம்பர் 1 வீரர் விராட் கோலி தான். கிரிக்கெட்டில் மட்டும் அவர் கிங் கோலி அல்ல வெளியில் உள்ள களத்திலும் அவர் கிங் தான் என்பதை இந்த செய்தி தெரியப்படுத்தும்.
HopperHQ’s 2021 தற்போது வெளியிட்டுள்ள ஒரு பட்டியலில் Instagram-ல் ஒரு போஸ்டுக்கு அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்களின் தரவரிசையை பதிவிட்டுள்ளது. இதன் சாராம்சம் Instagramல் உள்ள பணக்கார பிரபலங்களை வெளிச்சப்படுத்துவது தான்.
இந்த தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கிறார் கால்பந்து விளையாட்டின் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ. சமீபத்தில் கூட இரண்டு பாட்டில் கோக்கோ கோலாவை விலக்கி வைத்து தண்ணீர் குடியுங்கள் என்று பெரும் அதிர்வலையை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது இடத்தில் WWE மல்யுத்த நட்சத்திர வீரர் மற்றும் ஹாலிவுட் நடிகரான டுவெய்ன் ஜான்சன் எனும் ராக் (Rock) உள்ளார். இவர் சுமார் ரூ.11 கோடியை ஒரே ஒரு Instagram போஸ்டுக்கு சம்பளமாக பெருகிறார்.
இந்த தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மட்டுமே ஆவார். இதில் ஆச்சர்யமூட்டக்கூடிய தகவல் என்னவென்றால் கோலி ஒரு Instagram போஸ்ட்டினை பதிவு செய்ய அவருக்கு ரூ.5 கோடி சம்பளமாக வழங்கப்படுகின்றது. அடேங்கப்பா பல பேரும் வாழ்நாள் முழுக்க உழைத்து சேர்த்தாலும் சேர்க்க முடியாத தொகையை ஒரே ஒரு போஸ்ட்டுக்கு சம்பளமாக வாங்கும் அளவு உள்ளது விராட் கோலியின் இன்றைய மார்கெட் நிலவரம்.
இவர்களை தவிர இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள சில பிரபலங்களின் விவரங்களும் ஒரு போஸ்ட்டுக்கு வாங்கும் சம்பளமும் பின்வருமாறு,
கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸி – 8.6 கோடி, நெய்மர் (பிரேசில்) – ரூ.6. கோடி மற்றும் நடிகை ப்ரியங்கா சோப்ரா – ரூ.3 கோடி. மொத்தம் 395 பேர் கொண்ட பிரபலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது அதில் முதல் 20 தரவரிசைக்குள் 19வது இடத்தில் இருக்கும் ஒரே இந்திய பிரபலம் விராட் கோலி மட்டும் தான்.
Instagram மூலம் ஒரு போஸ்ட்டுக்கு இவ்வளவு வருமானம் வருகிறது என்பதே பலருக்கு இப்போது தான் தெரிந்திருக்கும். இன்னும் நாம் காணாத உலகம் பெரிய அளவில் உள்ளது என்பதையே இவையெல்லாம் உணர்த்துகிறது.