TamilSaaga

சோதனை முயற்சியில் சிங்கப்பூரில் அவசரகால பணியாளர்களுக்கு ‘ExoSuit” – SCDF அறிவிப்பு

சிங்கப்பூரில் ஒவ்வொரு நாளும் மக்களை காக்க சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினர் பல வேலைகளை மேற்கொள்கின்றனர். காயமடைந்த அல்லது இறந்த மக்களை stretcherகளில் தூக்கி சுமக்கின்றனர், அதோடுகூட ஆக்ஸிஜன் டாங்குகள் மற்றும் இதர மருத்துவ உபகரணங்களையும் சுமக்கின்றனர். இதனால் மிகுந்த முதுகு வலிக்கு அவர்கள் ஆளாகும் நிலையில், அவற்றை மாற்ற தற்போது அவர்களுக்கு புதிய உடையளிக்க SCDF முடிவுசெய்துள்ளது. இது சோதனையடிப்படையில் நடைமுறை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 29) இது வெளியிடப்பட்டது, “EXOSUIT” என்பது மார்பின் மேல் கட்டப்பட்ட ஒரு இலகுரக சாதனமாகும், இது கீழ் முதுகில் உள்ள அழுத்தத்தைத் தணிக்க உதவுகிறது பெருமளவு உதவும் என்று வடிவமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். முன்னோக்கி சாய்ந்திருக்கும் போது மார்புப் பட்டைகள் அணிபவரை சிறந்த முறையில் ஆதரிக்கின்றன, அது முதுகுத்தண்டில் உள்ள அழுத்தத்தைக் குறைக்கின்றன. இந்த EXOSUITஐ அணிந்திருப்பவர் முன்னோக்கி வளைந்ததால் அது ஆற்றலைச் சேமித்து, அணிந்திருப்பவர் நிமிர்ந்து செல்லும் போது தொடைகளுக்கு எதிராக சிறிது தள்ளுதலை வழங்க அந்த ஆற்றலை வெளியிடுகிறது. இந்த உதவி உந்து சக்தியை தேவைக்கேற்ப ஆன் மற்றும் ஆஃப் செய்யலாம்.

மேலும் இந்த் “சூட்டில் எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் எதுவும் இல்லை, எல்லாம் ஸ்பிரிங்-லோடட் சிஸ்டம்” என்று திரு இயோ கூறினார். பெஞ்சமின் இயோ ஒரு SCDF என்பது குறிப்பிடத்தக்கது.

“Exosuit” விரைவில் SCDF-ன் அவசர மருத்துவ சேவைகள் (EMS) மற்றும் பேரிடர் உதவி மற்றும் மீட்புக் குழுவின் தினசரி நடவடிக்கைகளில் சோதனை செய்யப்படும். துணை மருத்துவர்கள் மற்றும் அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர்கள் போன்ற EMS அதிகாரிகள் ஆக்ஸிஜன் தொட்டிகள் மற்றும் பிற கனரக மருத்துவ உபகரணங்களை எடுத்துச் செல்ல இது உதவும்.

Related posts