TamilSaaga

“எப்போதான் கீழ விழும்” : டூரியன் பழத்திற்காக கால்கடுக்க காத்திருந்த மக்கள் – கவலைப்பட்ட மொக்தார்

சிங்கப்பூரில் தற்போது டூரியன் பழங்களின் சீசன் ஆரம்பித்துள்ளது. வருடம்தோறும் இந்த பழங்களின் விற்பனை பட்டையை கிளம்பி வருகின்றது. மிகச்சிறந்த சுவை என்றபோதும் வாசனையில் பெரிய அளவில் சிறப்பு இல்லாத பழம் என்றபோது சிங்கப்பூர் மட்டுமின்றி உலக அளவில் இந்த பழத்திற்கு வரவேற்பு உண்டு.

இந்நிலையில் சிங்கப்பூரில் உள்ள இஸ்ஹுன் பூங்காவில் (yishun park) உள்ள டூரியன் மரங்களுக்கு கீழ் மக்கள் சிலர் சமூக இடைவெளியை கடைபிடித்து நிற்பதுபோன்ற புகைப்படம் இணையத்தில் பரவியது. இதை கடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்தான் மொக்தார் இதுகுறித்து தனது facebookல் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் ‘அந்த பகுதியில் நிறைய டூரியன் மரங்கள் இருக்கின்றன, ஆகையால் மக்கள் அந்த மரங்களில் உள்ள டூரியன் பழங்கள் எப்போது கீழே விழும் என்று காத்துக்கொண்டிருக்கின்றனர்.’ குழுமியுள்ள மக்கள் முறையாக சமூக இடைவெளியை கடைபிடித்துதான் நிரிக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.

இருப்பினும் கடுமையான முற்களும் சற்று எடை அதிகமுள்ள அந்த பழங்களின் கீழ் அவர்கள் நின்றுகொண்டிருப்பது சற்று கவலையை தருவதாகவும் அவர் கூறினார். சிங்கப்பூர் மக்களுக்கு மிகவும் பிடித்த பழங்களில் டூரியன் முதன்மையானது என்பதை இதுபோன்ற நிகழ்வுகள் பிரதிபலிக்கின்றன.

Related posts