TamilSaaga

கிளாஸ் 4 லெட்டருடன் S பாஸ் வேலை… ஆசை காண்பித்த ஏஜென்ட்… 9 ஆயிரம் வெள்ளி பணத்தை இழந்த தமிழர்!

சிங்கப்பூரை பொறுத்தவரை ஒரு வேலையில் இருந்து மற்றொரு வேலையில் மாறுவது அவ்வளவு எளிதல்ல. அத்திப்பூத்தார் போல எப்பொழுதாவது ஒருமுறைதான் ஏஜெண்ட் பீஸ் இல்லாமல் எளிதாக வேலை கிடைக்கும். மற்ற எல்லா நிறுவனங்களும் முறையாக ஏஜென்டின் மூலம் தான் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்வார்கள். சிங்கப்பூரில் டிரைவராக வேலை செய்யும் பல பேரின் கனவு கிளாஸ் 4 லைசென்ஸ் எடுக்க வேண்டும் என்பதுதான். ஏனென்றால் சிங்கப்பூரை பொறுத்தவரை class 4 வைத்திருக்கும் பொழுது நல்ல சம்பளம் கிடைக்கும்.

கிளாஸ் 3 லைசன்ஸ் வைத்திருக்கும் ஒரு நபர் சிங்கப்பூரில் 2000 வெள்ளி சம்பாதிக்க முடியும் என்ற நிலையில் கிளாஸ் 4வைத்திருந்தால் 4000 வெள்ளி வரை சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் 9000 வெள்ளி இழந்த கதை தான் சிங்கப்பூரில் நடந்திருக்கின்றது. சிங்கப்பூரில் கிளாஸ் 4 லைசன்ஸ் எடுக்க வேண்டுமானால் சம்பந்தப்பட்ட நிறுவனம் லெட்டர் கொடுத்தால் மட்டுமே எடுக்க முடியும். அப்படி இருக்கும் பொழுது நண்பரிடம் கூறிய ஏஜென்ட் கிளாஸ் ஃபோர் லெட்டருடன் S பாஸ் வேலை ரெடியாக உள்ளது ஆனால் இரண்டு நாட்களுக்குள் வேலைக்கு சேர வேண்டும் என்று கூறியுள்ளார்.

இவரும் கிளாஸ் ஃபோர் லெட்டர் கிடைக்கின்றது என்ற ஆசையில் ஏஜென்டிற்கு முன்பனமாக ஆயிரம் வெள்ளி அனுப்பி வேலையை தனக்கென அப்ளை பண்ண சொல்லி இருக்கிறார். எப்படியாவது இப்பொழுது இருக்கும் கம்பெனியில் காரணம் சொல்லி வேலையை விட்டு இரண்டு நாட்களில் புது வேலைக்கு சேர்ந்து விடலாம் என்ற யோசனையில் நண்பர் உடனடியாக யோசிக்காமல் செய்த சம்பவம் பின்னால் அவர் வாழ்க்கைக்கு பெரிய இடியாக வந்து விழுந்தது.

சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் உடனடியாக வேலை விட்டு செல்ல வேண்டுமானால் 2000 வெள்ளி கட்டினால் தான் பாஸ்போர்ட் தர முடியும் என்று சொல்ல நண்பர் கடனை வாங்கி 2000 வெளி பணத்தை செலுத்தி இருக்கிறார். புதிய வேலைக்கு செல்ல வேண்டுமானால் மொத்தம் 4000 வெள்ளி ஏஜென் பீஸ் என பேசப்பட்டது ஏற்கனவே ஆயிரம் பள்ளி நண்பர் செலுத்திய நிலையில் மீதமுள்ள 3000 வெள்ளி பணத்தை செலுத்திய பொழுது அந்த வேலை வேறு ஒருவருக்கு கொடுக்கப்பட்டு விட்டது என்று ஏஜென்ட் சொல்ல நண்பருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

அதற்கு பின்னர் இரு வேலையும் கையை விட்டுப் போன நிலையில் இனிமேல் என்ன செய்யப் போகின்றோம் என்று கண்ணீர் விட்டு கதறிய நண்பர், நண்பர்களின் தயவுடன் வேறொரு வேலைக்கு அப்ளை செய்து மறுபடியும் 3000 வெள்ளி பணம் கட்டி சென்று தற்பொழுது ஒரு வருடமாக கடன் கட்டிக் கொண்டிருக்கின்றார். நண்பர்களே ஒரு வேலையில் இருந்து மற்றொரு வேலைக்கு மாறுவதற்கு முன்னால் அதில் உள்ள பல விஷயங்களையும் ஆராய்ந்து முடிவு எடுத்துவிட்டு சொல்லுங்கள். ஏனென்றால் சிங்கப்பூரில் நாம் சம்பாதிக்கும் ஒவ்வொரு காசும் நமக்கு மிகவும் முக்கியம் என்பதை மனதில் வைத்து செயல்படுங்கள்.

Related posts