TamilSaaga

சிங்கப்பூரில் வங்கி வாடிக்கையாளர்கள் தகவல் கசிவு : தகவல் அளித்த பெண்ணிடம் விசாரணை – என்ன நடந்தது?

சிங்கப்பூரில் சீனா காவல்துறை ஆள்மாறாட்ட மோசடியில் சிக்கி, 1,100 க்கும் மேற்பட்ட வங்கி வாடிக்கையாளர்களின் தகவல்களை வெளியிட்டதாகக் கூறப்படும் பெண் மீது இன்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 20) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வங்கியில் பணிபுரிந்து வந்த 26 வயதான அந்த பெண், வங்கியின் மின்னணு வாடிக்கையாளர் தரவுத்தளத்தில் அங்கீகாரம் இல்லாமல் அணுகல் மற்றும் விசாரணைகளை நடத்தியதாகவும், ஏப்ரல் 6 முதல் 22 வரை 3,300 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் தகவல்களை அணுகியதாகவும் கூறப்படுகிறது.

ஷாங்காய் காவல்துறையை சேர்ந்ததாக கூறும் ஒரு நபருக்கு அந்த பெண் 1,100 வாடிக்கையாளர்களின் தகவல்களையும் அளித்ததாக கூறப்படுகிறது. கடந்த மே 7ம் தேதி அன்று ஒரு UOB வாங்கி ஊழியர் வாடிக்கையாளர் பெயர்கள், அடையாளம், மொபைல் எண்கள் மற்றும் வங்கியின் வாடிக்கையாளர்களின் 1,166 வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்களை சீனாவிலிருந்து போலீஸ் அதிகாரிகளாக ஆள்மாறாட்டம் செய்த மோசடி செய்பவர்களிடம் வெளியிட்டார் என்று ஸ்டரைட் டைம்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டது.

கணினி துஷ்பிரயோகம் சட்டத்தின் கீழ், அங்கீகரிக்கப்படாத கணினி பொருட்களை அணுகும் குற்றத்தைச் செய்த எந்தவொரு நபருக்கும் 5,000 வெள்ளி வரை அபராதம், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கிச் சட்டத்தின் கீழ், வாடிக்கையாளர் தகவலை அங்கீகரிக்காமல் வெளியிட்ட குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு 1,25,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குறிப்பு : சிங்கப்பூரில் அவசர போலீஸ் உதவி தேவைப்படுபவர்கள் 999ஐ அழைக்கவும் அல்லது அருகிலுள்ள காவல் மையத்தில் உள்ள காவல் அதிகாரியை அணுகவும்.

Related posts