சிங்கப்பூரில் முஹம்மது அஸ்ருல் என்ற ஒரு நபர் மோசடி அழைப்பு ஒன்றை பெற்றுள்ளார், இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த போலி ஆசாமி அவரை கண்டு பயந்தது ஒருபுறம் இருக்க முஹம்மது அந்த காணொளியை டிக்டோக்கில் பதிவேற்ற அது 25,000-க்கும் மேற்பட்ட லைக்களை பெற்றுள்ளது. அந்த மோசடி ஆசாமி, தனது அழைப்பின் போது ஒரு சிங்கப்பூர் போலீஸ் அதிகாரிகளைப் போல ஒரு போலி பின்னணியை வைத்திருந்தார். தான் சிங்கப்பூர் காவல் படையின் (SPF) “சரிபார்ப்புத் துறையை” சேர்ந்தவர் என்று கூறி முஹம்மதின் NRICஐ காட்ட வற்புறுத்தியுள்ளார்.
அந்த சிங்கப்பூர் நபர் (முஹம்மது அஸ்ருல்) பின்னர் தனது கேமராவை on செய்தபோது அவர் SPF சீருடையில் கேமராவில் தோன்ற திடுக்கிட்டுள்ளான் அந்த போலி போலீஸ் (செத்தாண்டா சேகரு). நீ முஹம்மது அஸ்ருல்-லா என்று கேட்டுவிட்டு அவர் போலீஸ் உடையில் இருந்ததும் தனது கேமராவை off செய்துவிட்டு அவரிடம் பேசத்துவங்கியுள்ளான். உடனே மிரட்டல் தொனியில் பேசிய முஹம்மது, நான் என்ன அணிந்திருக்கிறேன் பார்த்தாயா? மரியாதையாக உன் கேமராவை on செய் என்று கூறியுள்ளார் முஹம்மது.
உடனே செய்வதறியாது மறுமுனையில் இருந்து பேசிய அந்த மோசடி நபர், love you சார் என்ற கூற மீண்டும் மிரட்டல் தொனியில் முஹம்மது பேசியுள்ளார். இறுதியில் love you brother என்று கூறி அந்த மோசடி ஆசாமி தனது அழைப்பை துண்டித்துள்ளான். தொடர்ந்து வேறொரு வீடியோவில் பேசிய அஸ்ருல், தான் போலீஸ் அதிகாரியைப் போல் நடிக்க விரும்பவில்லை என்றும், இதுபோன்ற மோசடிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே விரும்புவதாகவும் தெளிவுபடுத்தினார்.
அவர் தனது தேசிய சேவையை (NS) சிங்கப்பூர் காவல் துறைக்கு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர் தற்போது பணியில் உள்ள காவலரா என்பது தெரியவில்லை. மேலும் அதுகுறித்து விளக்க வீடியோ ஒன்றையும் அவர் பதிவேற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.