TamilSaaga

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு “நற்செய்தி”… தாங்கள் விரும்பும் இடங்களுக்கு செல்ல அதிக தளர்வு – MOH அறிவிப்பு

சிங்கப்பூரில் dormitories-களில் வசிக்கும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு கோவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கைகள் இனி இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (மார்ச்.11) வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாட்டு ஊழியர்கள் வரும் மார்ச் 15ம் தேதி முதல் ஒரு குழுவாக விளையாட்டுத் தளங்களை பயன்படுத்தலாம். அதாவது புரியும்படி சொல்லவேண்டுமெனில், முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட 30 பேர் வரை குழுவாக விளையாடலாம். இந்த புதிய நடைமுறை வரும் செவ்வாய்கிழமை (மார்ச்.15) முதல் தொடங்கும்” என்று தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் இந்த 7 படிப்புகளுக்கு “தரமான” சம்பளம்.. Freshers-க்கு ஆரம்பமே “அதகளம்” – சிங்கப்பூருக்கு போனா இப்படி உங்க ஊரே வியக்குற அளவுக்கு போகணும்!

வரும் செவ்வாய் முதல், வார நாட்களில் 15,000 வரை தடுப்பூசி போடப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சமூக இடங்களை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்றும், வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் 30,000 பேர் வரை அனுமதிக்கப்படுவார்கள் என்று MOH தெரிவித்துள்ளது. அப்படி சமூக இடங்களுக்கு செல்லும் வெளிநாட்டு ஊழியர்கள் அங்கு 8 மணிநேரம் வரை நேரம் செலவிட அனுமதி உண்டு. என்றும் MOH மேலும் கூறியது.

பிரபலமான இடங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க, வெளிநாட்டு தொழிலாளர்கள் தாங்கள் விரும்பும் இடங்களுக்குச் செல்ல முன்னதாகவே விண்ணப்பிக்க வேண்டும் என்றும் MOH கூறியுள்ளது.

Dormitory-களில் வசிக்கும் வெளிநாட்டு தொழிலாளர்களில் 98 சதவீதத்திற்கும் அதிகமானோர் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts