TamilSaaga

சிங்கப்பூரின் ரெட்ஹில் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கட்டாய கோவிட் தொற்று பரிசோதனை

ரெட்ஹில் பகுதியில் கொரோனா தொற்று பரவுதலுக்கான காரணிகள் தென்படுவதால் அங்கு வசிக்கும் மக்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரெட் ஹில் லேனில் உள்ள ப்ளாக் எண்கள் 81 முதல் 83 வரை மற்றும் ரெட்ஹில் க்ளோசில் உள்ள ப்ளாக் எண்கள் 87 முதல் 90 வரை உள்ள வசிப்பாளர்களுக்கு இன்று (ஜீன்.21) முதல் புதன் கிழமை (ஜீன்.23) வரை பரிசோதனை நடத்தப்படுகிறது.

இந்த குறிப்பிட்ட பகுதி வசிப்பாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் இந்த நாட்களில் தங்களை பரிசோதனை செய்துகொள்ளலாம்.

சோதனை பற்றிய விவரங்கள் வசிப்பாளர்களுக்கு துண்டு பிரசுரங்கள் மற்றும் அலைபேசி குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கப்படும்.

இந்த பகுதியின் கழிவுநீர் மாதிரிகளில் கிருமிப் பரவலுக்கான வைரஸ் கிறுமி சாத்தியக்கூறுகள் தென்பட்டுள்ளதால் இந்த பரிசோதனை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related posts