TamilSaaga

“அமெரிக்க-இங்கிலாந்து-ஆஸ்திரேலியா கூட்டமைப்பு” : ஆஸ்திரேலியா பிரதமருடன் பிரதமர் லீ உரையாடல்

ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா இடையே புதிதாக நிறுவப்பட்ட முத்தரப்பு கூட்டாண்மை குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனால் நமது பிரதமர் லீ சியன் லூங்கிற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் (MFA) தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடென், பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் திரு. மோரிசன் ஆகியோர் இன்று வியாழக்கிழமை (செப்டம்பர் 16) முன்னதாக Aukus என்றழைக்கப்படும் வரலாற்றுப் பாதுகாப்பு கூட்டணியை அறிவித்தனர்.

இந்த ஒப்பந்தம் ஆஸ்திரேலியாவை அதன் நீர்மூழ்கிக் கப்பல்களை அணுசக்தி கொண்ட கடற்படையாக மேம்படுத்தவும். அமெரிக்காவிலிருந்து நீண்ட தூர டோமாஹாக் கப்பல் ஏவுகணைகளைப் பெறவும் அனுமதிக்கும். அணுசக்தி கடற்படையை உருவாக்க அமெரிக்கா உதவி செய்த ஒரே நாடு பிரிட்டன் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று நாடுகளும் தகவல் மற்றும் தொழில்நுட்ப பகிர்வு, மற்றும் இணையம், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பங்கள், கடல்கடந்த திறன்களை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளன. சிங்கப்பூர் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவுடன் பகிர்ந்து கொண்ட நீண்டகால இருதரப்பு மற்றும் பலதரப்பு உறவுகளை பிரதமர் லீ தனது அழைப்பின் போது குறிப்பிட்டார் என்று MFA தெரிவித்துள்ளது.

கோவிட் -19 தொற்றுநோயை இரு நாடுகளும் எப்படி எதிர்கொள்கின்றன என்பதையும் இரு தலைவர்களும் விவாதித்தனர். இரு நாடுகளும் 5,00,000 டோஸ் ஃபைசர் தடுப்பூசியை மாற்ற ஒப்புக்கொண்டன, இதில் ஆஸ்திரேலியா செப்டம்பரில் டோஸைப் பெற்று பின்னர் டிசம்பரில் சிங்கப்பூருக்கு இதே எண்ணிக்கையை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts