TamilSaaga

கொரோனாவிடம் இருந்து மக்களை காப்பாற்றி… உயிர்போகும் நிலையில் இருந்து 450 நாட்கள் கழித்து… “மறுபிறவி” எடுத்து வந்த “ஹீரோ” ராம்குமார்!

கொரோனாவில் இருந்து மற்றவர்களை பாதுகாக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டு, பலரையும் காப்பாற்றி கடைசியில் தானே அதில் சிக்கி 15 மாதங்களுக்கு மீண்டு வந்திருக்கும் ஹீரோவை பற்றி இங்கே குறிப்பிடுவதில், பெருமை கொள்கிறது TAMIL SAAGA SINGAPORE செய்தி நிறுவனம்.

அவரது பெயர் அருண்குமார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம், அபுதாபியில் கோவிட் முன்கள ஊழியராக பணிபுரிந்த அருண்குமார், கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட, அவரது நுரையீரலில் முற்றிலும் மோசமடைந்தது. கார்டியக் அரெஸ்ட் ஏற்பட்டது. மூச்சுவிடவே முடியாமல் சிரமப்பட்டு ஆறு மாதங்களாக அரை மயக்க நிலையில் இருந்தார்.

இந்த சூழலில், Burjeel Holdings-ல் நடந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு, அதிசயத்தக்க வகையில் உடல் நலம் மெல்ல மெல்ல மீண்டு வந்தார். இதனால், கடந்த ஜனவரி மாதம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இருந்தாலும், அவர் அந்த பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்து மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்ப 9 மாதங்கள் ஆகிவிட்டது. கிட்டத்தட்ட 450 நாட்கள் கழித்து தற்போது மீண்டும் அவர் தனது பணிக்கு திரும்பியுள்ளார்.

ஆம்! அபுதாபியில் பணிபுரியும் அருண்குமார் 450 நாட்கள் கழித்து மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார். சக ஊழியர் அவரது “மறுபிறவியை” , “மறுவருகையை” சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.

“கோவிட்-19-ஐ துணிச்சலாக எதிர்த்துப் போராடி சிறப்பாக மீண்டு வந்துள்ள எங்களது முன்கள முன்னணி வீரரான அருண்குமார் நாயரை மீண்டும் வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று புர்ஜீல் ஹோல்டிங்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி ஜான் சுனில் கூறினார். அவர் மீண்டும் உழைத்து, எதிர்காலத்தில் இன்னும் பல வெற்றிகளை பெற அவரை வாழ்த்துகிறேன்” என்றும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க – 50,000 லாரிகள்.. ஜனவரி.1 முதல் Rain Covers கட்டாயம்.. பின்னால் அமர்ந்து செல்லும் ஊழியர்கள் மேல் ஒரு சொட்டு மழை நீர் படக்கூடாது – சிங்கப்பூர் அரசு உத்தரவு!

கடந்த ஆண்டு ஜூலை முதல், அருண்குமாருக்கு எக்ஸ்ட்ரா கார்போரியல் மெம்பிரேன் ஆக்சிஜன் (ECMO) கொடுக்கப்பட்டு வந்தது. அதன் உதவியால் தான் அவருக்கு சுவாசமே கிடைத்தது. அதுமட்டுமில்லை.. ஏகப்பட்ட கார்டியாக் அரெஸ்டில் இருந்தும் அவர் தப்பித்துள்ளார். ஜனவரியில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு, அவரால் பழைய நிலைக்கு திரும்ப முடியவில்லை. எனவே அவர் மருத்துவமனைக்கு அருகிலுள்ள ஒரு குடியிருப்பில் தங்கியிருந்தார், தேவைப்படும் போதெல்லாம் அவருக்கு அவரது நிறுவனமே மருத்துவ உதவியை வழங்கியது.

இதுகுறித்து பேசிய அருண்குமார், “என்னால் சரியாக இயங்க முடியவில்லை. எனது அன்றாட வேலைகளே எனக்கு சவாலாக இருந்தன. முதல் 2-3 மாதங்களில் தனியாக கழிவறைக்கு செல்வது கூட கடினமாக இருந்தது. ஆனால் எல்லாவற்றுக்கும் என் மனைவி ஜென்னியிடம் இருந்து எனக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்தது” என்றார்.

தொடர்ந்து பேசிய அருண்குமார் சற்று உணர்ச்சிவசப்பட்டு, “நான் மீண்டு வருவதற்கு என்னை ஊக்குவித்த என் நிர்வாகத்திடம் இருந்து மிகப்பெரிய சப்போர்ட் கிடைத்தது. அதை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. நிர்வாகம், மருத்துவர்கள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவுடனும் ஊக்கத்துடனும் இன்று நான் இந்த நிலையில் இருக்கிறேன்” என்று கண்கலங்க கூறினார்.

வெல்கம் சார்! மக்களுக்கு மீண்டும் உங்கள் சேவை தேவைப்படுகிறது!

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” தளத்தை பின்தொடருங்கள்

Related posts