உலகநாடுகள் முழுவதும் கொரோனா தொற்றினை தடுக்க ஒரே வழியாக தடுப்பூசி மட்டுமே உள்ளது எனவும் அதனை இயன்ற அளவு தீவிரமாக செலுத்தி முடிக்க வேண்டும் என்ற நோக்குடனும் செயல்பட்டு வருகின்றன.
சிங்கப்பூரில் தடுப்பூசி திட்டம் :
சிங்கப்பூரை பொறுத்தவரை உலக நாடுகளுக்கு மத்தியில் மிக விரைவாக தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தி வரும் நாடுகளில் ஒன்றாக உள்ளது. பைசர் மற்றும் மெடர்னா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. ஏறத்தாழ 57 லட்சம் மக்கள் தொகையை கொண்ட சிங்கப்பூரில் சுமார் 75% மக்களுக்கு குறைந்தபட்சம் முதல் தவணை தடுப்பூசியும், 50% பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளது. இந்த காரணங்களால் சிங்கப்பூரில் கொரோனா தொற்று பெரிதாக அதிகரிக்கவில்லை.
தடுப்பூசி போட்டவர்களுக்கும் கொரோனா?
சிங்கப்பூரில் கடைசி 28 நாட்களில் தொற்று பரவிய நபர்களின் எண்ணிக்கை 1096. அதில் சுமார் 484 பேர் (44%) முழுவதுமாக இரண்டு தவணை தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டவர்கள். முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட 30% பேருக்கும், தடுப்பூசியே செலுத்திக்கொள்ளாத 25% பேருக்கும் தொற்று பரவியுள்ளது.
லேசான பாதிப்பு :
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும் சதவீதத்தினர் லேசான அளவிலான பாதிப்பையே எதிர்கொண்டனர். 7 பேருக்கு மட்டுமே ஆக்ஸிஜன் சிகிச்சை தேவைப்பட்டது. அந்த 7 பெரிலும் 6 பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள். இதிலிருந்து தெளிவாக தடுப்பூசி போட்டுக்கொண்டால் தீவிரமான பாதிப்பு இல்லை என அறியலாம்.