TamilSaaga

இந்தியர்கள் உள்பட வெளிநாட்டவருக்கு சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு – 3 ஆண்டுகளில் 1500 பேருக்கு வேலையை உறுதிசெய்த OCBC வங்கி

சிங்கப்பூரில் உள்ள பிரபல வங்கிகளில் OCBC வங்கியும் ஒன்று, கடந்த ஆண்டும் இந்த ஆண்டு துவக்கத்திலும் பெரிய அளவிலான மோசடிகளுக்கு ஆளான இந்த வங்கி தற்போது தனது டிஜிட்டல் ரீதியான வளர்ச்சியை விரிவுபடுத்தவுள்ளது. இதனால் அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் 1,500 தொழில்நுட்ப ஊழியர்களை பணியமர்த்துவதன் மூலம் அந்த டிஜிட்டல் மாற்றத்தை துரிதப்படுத்த திட்டமிட்டுள்ளது OCBC வங்கி என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் வந்தது ஒரு கட்டிட தொழிலாளியாக.. ஆனால் இன்று சிங்கையில் 7 கடைகளுக்கு சொந்தக்காரர் – மனிதவள அமைச்சகமே “வியந்து பாராட்டிய தமிழர்”

வங்கியின் இந்த புதிய முயற்சி வாடிக்கையாளர்களுக்கு அதிக பாதுகாப்பான சேவைகளை வழங்க வழிவகுக்கும். OCBC வங்கியின் குழும தலைமை மற்றும் இயக்க அதிகாரி லிம் கியாங் டோங்கின் அறிக்கையின்படி, இந்த புதிய வேலைவாய்ப்புகள் Application (Apps) Developers, இணைய பாதுகாப்பு வல்லுநர்கள், பிளாக்செயின் நிபுணர்கள் மற்றும் தரவு விஞ்ஞானிகள் உட்பட பல தொழில் நுட்ப வல்லுநர்களை பணியமர்த்த உள்ளது என்று உறுதியளித்தார்.

சிங்கப்பூரில் உள்ள தங்கள் வங்கிகளுக்கு தான் அதிக அளவிலான ஆட்கள் பணியமர்த்தப்படவுள்ளனர் என்றும். அதே போல சீனா, ஹாங்காங், மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் உள்ள அதன் வெளிநாட்டு நிறுவனங்களிலும் பணியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்று கூறியுள்ளது OCBC. தொழில்நுட்ப திறமையாளர்களின் உலகளாவிய பற்றாக்குறையின் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றும் லிம் கூறினார்.

அதேநேரத்தில் ஏற்கனவே OCBC வங்கியில் பணிபுரியும் ஊழியர்களில் சிலர் பயிற்சி பெற்று மீண்டும் பணியமர்த்தப்படுகிறார்கள். மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக தொழில்நுட்ப செயல்பாடுகளில் ஊழியர்களுக்கான பயிற்சி மற்றும் மேம்பாட்டுக்கான செலவினங்களை வங்கி அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. S$20 மில்லியன் முதலீட்டில், அதன் ஊழியர்களின் டிஜிட்டல் திறன்களைப் மேம்படுத்துவதற்கு 2018ல் OCBC Future Smart Program திட்டத்தை அறிமுகப்படுத்தியதாக லிம் வல்கன் கூறினார்.

“சிங்கப்பூரின் வரலாற்றில் இதுவே முதல் முறை” : Marina Bayல் துவங்கியது Hot Air Balloon சவாரி – யாரெல்லாம் போகமுடியும்? முழு விபரம்

சிங்கப்பூர் உள்பட 5 நாடுகளில் இந்த வேலைவாய்ப்புகள் அமையவுள்ளதால் நிச்சயம் இந்தியா உள்பட பிற வெளிநாட்டு ஊழியர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1500 தொழில்நுட்ப வல்லுநர்கள் என்பது இந்த தொற்று காலத்தில் மிகப்பெரிய அளவில் Recruitment என்பதை நாம் மறந்துவிட கூடாது. ஆகவே OCBCயின் இந்த அறிவிப்பு நிச்சயம் மிகப்பெரிய வேலைவாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts