TamilSaaga

“நவம்பர் இறுதியில் மலேசியாவுடனான நில எல்லை திறக்கப்படலாம்” : சிங்கப்பூர் அமைச்சர் நம்பிக்கை

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே நில எல்லையை நவம்பர் இறுதிக்குள் திறக்க அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர், ஆனால் அதுகுறித்த விவரங்கள் இன்னும் தயாரிக்கப்பட்டு வருகின்றன என்று வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் கன் கிம் யோங் இன்று சனிக்கிழமை (நவம்பர் 20) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் நிருபர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, பெருந்தொற்று பல அமைச்சக பணிக்குழுவின் இணைத் தலைவர் திரு கான், செயல்பாட்டு விவரங்களை இறுதி செய்ய சிங்கப்பூர் மற்றும் மலேசிய அதிகாரிகள் “மிகவும் நெருக்கமாக இணைந்து செயல்படுகிறார்கள்” என்று கூறினார்.

இதையும் படியுங்கள் : இனி லாரி பயணம் இல்லை புலம்பெயர்ந்த தொழிலாளர்களே

கடந்த வியாழன் அன்று, மலேசிய ஊடகங்கள் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் ஜோகூர் முதல்வர் ஹஸ்னி முகமது கூறியது, “சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான தடுப்பூசி போடப்பட்ட நிலப் பயணப் பாதை (VTL) நவம்பர் 29 அன்று திறக்கப்படும், அதே நாளில் கோலாலம்பூர் மற்றும் சிங்கப்பூர் இடையே விமான VTL திறக்கப்படும் என்று கூறினார் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அவருடைய கருத்தில் நானும் நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று கிம் அந்த மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பில் கூறினார். மேலும் இதுகுறித்த விவரங்களை அடுத்த வாரம் பகிர்ந்து கொள்வேன் என்று நம்புவதாகவும் அவர் மேலும் கூறினார். இருப்பினும், ஒவ்வொரு நாளும் சிங்கப்பூருக்கும் ஜோகூர் பாருவுக்கும் இடையில் நூறாயிரக்கணக்கான மக்கள் கடந்து செல்லும் தொற்றுநோய்க்கு முந்தைய நாட்களுக்கு திரும்ப தற்போது வாய்ப்பில்லை என்று அவர் கூறினார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

“நாங்கள் ஒரு குறிப்பிட்ட வரம்பு ஒதுக்கீட்டில் சிறிய எண்ணிக்கையிலான மக்களுடன் தொடங்குவோம்,” என்று அவர் கூறினார். “பெருந்தொற்று தொடங்கியதில் இருந்து நீண்ட காலமாகப் பிரிந்திருக்கும் குடும்பங்களை, அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் மீண்டும் ஒன்றிணைக்க அனுமதிப்பதே முதன்மையானது என்றும் அவர் கூறினார்.”

Related posts