TamilSaaga

சிங்கப்பூர்.. அதிக நேரம் பாலியல் உறவில் ஈடுபட பயன்படுத்தப்படும் மாத்திரை – இதய கோளாறு வர வாய்ப்பு – பகீர் தகவலை வெளியிட்ட HSA

சிங்கப்பூரில் நுகர்வோருக்கு கடுமையான பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய “சக்திவாய்ந்த மருத்துவப் பொருட்கள்” இரண்டு தயாரிப்புகளில் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) இன்று புதன்கிழமை (ஏப்ரல் 27) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆண்களுக்கு பாலியல் உறவின்போது விறைப்புத்தன்மை குறைபாட்டிற்கு சிகிச்சை அளிப்பதாக கூறப்படும் AK-II Phenomenal King மற்றும் எடை குறைப்பு மாத்திரையான Premium Pro S Flash ஆகியவற்றை பொதுமக்கள் வாங்கி உட்கொள்ளக்கூடாது என்று எச்சரித்துள்ளது HSA.

மேற்குறிய இந்த மருந்துகள் உள்ளூர் இ-காமர்ஸ் தளங்களான Carousell, Lazada, Shopee, Qoo10 மற்றும் முகநூல் வழியாக விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேற்குறிய அந்த இ-காமர்ஸ் தளங்களுடன் இணைந்து செயல்பட்டு அந்த மாத்திரைகள் விற்பனையாவதை நிறுத்த HSA முடிவெடுத்துள்ளது.

AK-II ஃபெனோமினல் Kingகை ஆன்லைனில் விற்பனை செய்வது குறித்து HSAக்கு பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்ததை அடுத்து இந்த அதிரடி நடவடிக்கையை சிங்கப்பூர் சுகாதார அறிவியல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

நல்லபடியாக முடியவிருந்த சித்திரை தேர் திருவிழா.. கண்ணிமைக்கும் நேரத்தில் தேரின் மீது பாய்ந்த மின்சாரம் – 10 பேர் சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி பலி

இந்த தயாரிப்பு ஆண்களுக்கான பாலியல் மேம்பாட்டிற்கான இயற்கையான தயாரிப்பாக சந்தைப்படுத்தப்பட்டது மற்றும் “பக்க விளைவுகள் இல்லாதது” எனக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆனால் HSA அந்த தயாரிப்பை சோதித்து, அதில் விறைப்புத்தன்மைக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் தடாலாஃபிலின் அளவு வழக்கமான அளவை விட 60 மடங்கு அதிகமாக இருப்பதைக் கண்டறிந்தது.

“என் மகன் உயிரோடு திரும்ப வேண்டும்; யுவர் ஹானர்” – 11 மணி நேரம் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் போராடிய நாகேந்திரன் தாயார் – தூக்கு உறுதி!

“தடாலாஃபிலின் முறையற்ற பயன்பாடு ஆபத்தானது மற்றும் மாரடைப்பு, பக்கவாதம், படபடப்பு, ஒழுங்கற்ற இதயத் துடிப்பு மற்றும் மிக நீண்ட நேர விறைப்புத்தன்மை உள்ளிட்ட கடுமையான பாதகமான விளைவுகளின் அபாயத்தை அதிகரிக்கலாம்” என்று HSA எச்சரித்துள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts