TamilSaaga

வெளிநாட்டு ஊழியரை வேலைக்கு எடுக்கும் போது இனி ஏஜென்ட்டை நிறுத்த முடிவு? பல லட்சங்கள் மிச்சம்… அப்போ செலவுகள் இனி இவ்வளவு தானா.. எதிர்பார்ப்பில் சிங்கப்பூர் ஊழியர்கள்!

வெளிநாட்டு வேலைக்காக பலரும் முயற்சிக்க கல்வி தகுதிகள் என பல இருந்தாலும் கேட்கப்படும் லட்ச தொகையை கொடுக்க பயந்தே பலரும் அந்த ஆசையை புதைத்து கொள்கின்றனர். கடன் வாங்கி வேலைக்கு செல்ல பலர் நினைத்தாலும் பெரும்பாலானவர்கள் அந்த ஆசையை செய்ய துணிவதில்லை.

ஒரு வேலைக்கு ஏறக்குறைய 4 லட்சம் வரை கூட செலவுகள் இருக்கிறது. இதில் அதிகம் பயனடைவது என்னவோ ஏஜென்ட் தான். அவர்கள் தான் வாங்கப்படும் பெரிய தொகையை எடுத்து கொள்கின்றனர். இதில் ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவே வேலைக்கான பாஸ்களுக்கு கேட்கப்படுவது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

இதையும் படிங்க: சிங்கப்பூர் வேலைக்கு வரணுமா கண்டிப்பா இந்த course பண்ணணும்… Fail ஆனா நாடு திரும்ப வேண்டியது தான்

இந்த ஏஜென்ட் வழக்கத்தினை நிறுத்த முடிவு எடுத்து இருக்கிறது சிங்கப்பூரின் அண்டை நாடான மலேசியா. இந்த முடிவின் மூலம் மலேசியாவிற்கு வேலைக்கு வெளிநாட்டு ஊழியர்களை எடுக்கும் போது 80 சதவீதம் வரை செலவுகள் குறையும் என்கிறது மலேசிய முதலாளிகள் கூட்டமைப்பு.

அரசாங்கத்தின் இந்த முடிவு சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு. இதனால் வேலைக்காக பல லட்சம் கடன் வாங்கி கொண்டு வேலைக்கு வந்து கடனை அடைத்தே வாழ்க்கை இழக்கும் பலருக்கு விடிவு காலம் வந்து விட்டதாக நம்புகிறேன். இதனால் அவர்கள் பல லட்சங்கள் மிச்சம் தான். வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் போது ஏஜென்ட்டை நீக்கும் செயல்முறை பெரிய அளவில் ஊழியர்களுக்கு உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: குடும்ப கஷ்டத்திற்காக சிங்கப்பூரில் ஓயாத வேலை… 39 வயதில் நடக்க இருந்த திருமணம்… மயங்கி விழுந்த இடத்தில் உயிரிழந்த தமிழர்!

முன்னதாக, சமீபத்தில் மலேசிய நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் போது ஏஜென்ட் பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என மலேசியாவில் பதவியேற்று இருக்கும் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்து இருந்தார். இதனால் பல லட்சங்கள் மிச்சம் ஆகும் என்று கூறப்படுகிறது.

மேலும், தற்போது இந்த நடைமுறை எப்போது அமலுக்கு வரும் என தெரியவில்லை. ஆனால் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். அதிலும் முதலில் பங்களாதேஷ் ஊழியர்கள் தான் அமல்படுத்தப்படும் எனத் தெரிகிறது. தொடர்ச்சியாக மற்ற நாடுகளுக்கும் இந்த நடைமுறை இருக்கும் என அறியப்படுகிறது. மலேசியாவின் இந்த திடீர் நடைமுறை பலரிடத்திலும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், விரைவில் இதே நடைமுறையை சிங்கப்பூரும் அறிவிக்க வேண்டும் என ஊழியர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts