TamilSaaga

தொடரப்பட்ட அவதூறு வழக்கு.. வெற்றி பெற்ற சிங்கப்பூர் பிரதமர் லீ : வழங்கப்பட்ட 3,70,000 வெள்ளி

சிங்கப்பூரில் உள்ள சமூக அரசியல் வலைத்தளமான தி ஆன்லைன் சிட்டிசன் (TOC) மற்றும் TOCயில் வெளியான கட்டுரையின் எழுத்தாளர் ருபாஷினி ஷுண்முகநாதன் ஆகியோருக்கு எதிரான இரண்டு தனித்தனி அவதூறு வழக்குகளில் பிரதமர் லீ சியன் லூங்கிற்கு இன்று புதன்கிழமை உயர் நீதிமன்றத்தால்
(செப்டம்பர் 1) 3,70,000 வெள்ளி வழங்கப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 2019ம் ஆண்டில், திரு. லீ மற்றும் அவரது உடன்பிறப்புகளுடனான தகராறு குறித்தும் டாக்டர் லீ வெய் லிங் மற்றும் திரு லீ சியன் யாங், 38 ஆக்ஸ்லி சாலையில் உள்ள தங்கள் குடும்ப வீடு குறித்தும் திருமதி. ரூபாஷினி எழுதிய கட்டுரையை TOC வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த கட்டுரையை நீதிபதி ஆட்ரி லிம் அவர்களால் அவதூறாகக் கண்டறியப்பட்டது. திரு லீ மீதான அவதூறு “கடுமையானது மற்றும் தீவிரமானது” என்று குறிப்பிட்டுள்ளது.

அவதூறான கருத்துக்கள் அவரது தனிப்பட்ட ஒருமைப்பாடு, பண்பு மற்றும் நற்பெயரை மட்டும் தாக்காது, பிரதமரின் புகழையும், சிங்கப்பூரை வழிநடத்தும் அவரது தார்மீக அதிகாரத்தை சேதப்படுத்துகிறது என்று நீதிபதி லிம் 60 பக்க தீர்ப்பில் கூறினார்.

இந்நிலையில் சமூக அரசியல் வலைத்தளமான The Online Citizenன் ஆசிரியர் டெர்ரி சூவுக்கு எதிரான இரண்டு தனித்தனி அவதூறு வழக்குகளில் பிரதமர் லீ சியன் லூங்கிற்கு உயர்நீதிமன்றத்தால் இன்று 3,70,000 வெள்ளி வழங்கப்பட்டுள்ளது.

Related posts