TamilSaaga

சிங்கப்பூரில் Dormitoryயில் மேலும் 90 பேருக்கு தொற்று : மீண்டும் 1000ஐ தாண்டிய தொற்று எண்ணிக்கை

சிங்கப்பூரில் நாளுக்கு நாள் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இந்நிலையில் சிங்கப்பூரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 19) இரண்டாவது நாளாக 1,000க்கும் மேற்பட்ட புதிய பெருந்தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளன. நேற்று ஒரே நாளில் புதிதாக 1,012 வழக்குகள் பதிவாகியுள்ளன, கடந்த ஆண்டு ஏப்ரல் 23 அன்று பதிவான 1,037 வழக்குகளுக்கு பிறகு பதிவாகும் அதிகபட்ச ஒரு நாள் தொற்று இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் 919 வழக்குகள் மற்றும் 90 வழக்குகள் விடுதியில் வசிப்பவர்களில் உள்ளன என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது. இவர்களில் 321 பேர் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் ஆவர். மேலும் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த மூவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. தற்போது சிங்கப்பூரில் இதுவரை பதிவான மொத்த கோவிட் -19 தொற்று எண்ணிக்கை 77,804 ஆக உயர்ந்துள்ளது.

முதியோர் இல்லங்களில் இரண்டு புதிய கிளஸ்டர்களும் பதிவாகியுள்ளன, குடியிருப்பாளர்கள் மற்றும் அங்கு பணிபுரியும் ஊழியர்களிடையே பரவுதல் கண்டறியப்பட்டதாக MOH தெரிவித்துள்ளது. உட்லேண்ட்ஸ் பராமரிப்பு இல்லத்தில் மொத்தம் 12 வழக்குகள் உள்ளன, அவற்றில் 11 வழக்குகள் அங்கு வசிக்கும் குடியிருப்பாளர்கள்.

சிங்கப்பூரில் பிளாக் 210 டோ பயோ லோரோங் 8 மார்க்கெட் மற்றும் உணவு மையத்தில் இரண்டு புதிய வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளதாக MOH தெரிவித்துள்ளது. இப்போது ;அந்த குழுமத்தில் 41 வழக்குகள் உள்ளன. இதனையடுத்து சந்தை மற்றும் உணவு மையத்தில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் சோதிக்கப்படுவார்கள் என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related posts