TamilSaaga

சிங்கப்பூரில் ஜூன் 1ம் தேதி முதல் கொண்டுவரப்படும் முக்கியமாற்றம்… இந்த கார்டை எல்லாம் இனி பயன்படுத்த முடியாது…

நம் ஊர்களில் பேருந்தில் ஏறினால் சில்லறை கொடுத்து தான் டிக்கெட் எடுப்பது வழக்கம். ஆனால் சிங்கப்பூரை பொறுத்தவரை 99 சதவீதம் பேர் கார்டை பயன்படுத்தி தான் பேருந்து மற்றும் ரயில்களில் டிக்கெட் எடுக்கின்றனர். அவ்வாறு பயணிகள் பயன்படுத்தும் கார்டில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் புது மாற்றம் வரப்போவதாக சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.

சிம்ப்ளிகோ என்ற அடையாளச் சின்னம் இடம்பெறாத ஈசிலிங்க் அட்டைகளை பயன்படுத்தி பேருந்து மற்றும் ரயில் கட்டணங்களை செலுத்த முடியாது என அரசு அறிவித்துள்ளது. அதேபோன்று சிம்ப்ளிகோ சின்னம் இடம் பெறாத நெட்ஸ் பிளாஷ்பே கார்டுகளையும் பயன்படுத்த முடியாது என அறிவித்துள்ளது. எனவே ஜூன் ஒன்றாம் தேதி முதல் பயணிகள் சிம்ப்ளிகோ ஈசிலிங்க் கார்டு, பேங்க் கார்டுகள் மற்றும் மொபைல் வாலெட் எனப்படும் செல்போனுடன் இணைக்கப்பட்டுள்ள பேமெண்ட் கார்டை பயன்படுத்தி பேருந்து மற்றும் ரயில் கட்டணங்களை செலுத்தலாம் என அரசு அறிவித்துள்ளது.

இந்த மாற்றம் ஆனது சலுகை கார்டுகளை பயன்படுத்தும் மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சீனியர் சிட்டிசன் போன்றவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய ஈசி லிங்க் அட்டையில் பணம் உள்ளது அதை என்ன செய்வது? என்ற கேள்வி உங்களிடம் உள்ளதா.

கவலை வேண்டாம் அந்த அட்டையை பயன்படுத்தி டோல்கேட் கட்டணங்கள், பார்க்கிங் கட்டணங்கள் மற்றும் வாகனங்கள் சம்பந்தப்பட்ட மற்ற கட்டணங்களை செலுத்துவதற்கு நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஷாப்பிங் மால்களில் பர்ச்சேஸ் செய்யும் பேமெண்ட் கட்டணங்களுக்கு இந்த கார்டினை பயன்படுத்த முடியாது.

எனவே பொதுமக்கள் அனைவரும் சிம்ப்ளிக்கோ ஆப்பினை ஃபோன்களில் டவுன்லோட் செய்யும்படி அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் பொது மக்களுக்கு உதவும் நோக்கில் அனைத்து போக்குவரத்து தளங்களிலும் உதவி செய்யும் நபர்கள் ரெடியாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts