TamilSaaga

சிங்கப்பூர் விசாவிற்கு வாங்குவது $180 டாலர் தான்… ஆனால் IPA-வை வைத்து தமிழக இளைஞர்களின் வாழ்க்கையோடு விளையாடும் ஏஜெண்ட்ஸ்.. MOM-ல் Approved என்று வந்தாலும் நம்பாதீங்க! MOMல் இருந்தே போலி விசா உருவாக்கி ஏமாற்று வேலை!

சிங்கப்பூருக்கு அனுப்புவதாக போலி ஏஜென்ட்கள் ஏமாற்று வேலையில் எந்த லெவலுக்கு செல்கிறார்கள் என்பது தான் அதிர்ச்சிக்கரமான உண்மை. காசுக்காக வேலைக்கும் செல்லும் ஊழியர்களின் தொகையை அடிக்க சில ஏஜென்ட் செய்யும் தில்லாலங்கடி அதிகரித்து விட்டது.

காசை ஏமாற்று விட்டு எஸ்கேப் ஆன ஏஜென்ட் கதை எல்லாம் பழசாகி விட்டது போல. ட்ரெண்ட்டை மாற்றி IPA வையே போலியாக தயாரித்து கொடுத்துள்ளனர். அதும் சிங்கப்பூரில் இல்லாத ஒரு கம்பெனியை போட்டு கொடுத்து விடுகின்றனர்.

இந்த IPA எண்ணை வைத்து MOM இணையதளத்தில் செக் செய்து பாருங்கள். ஆப்லைனில் அப்ளே செய்திருக்கும் போது உங்களுக்கு முதல் இரண்டு நாள் அதில் தகவல் காட்டாது. மூன்று நாட்களுக்கும் மேல் அது தகவல் இல்லை எனக் காட்டினால் கண்டிப்பாக இது போலி தான் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

இதை எப்படி தயார் செய்கிறார்கள் தெரியுமா? MOM தளத்தில் இருந்து ஒரு IPA வை எடுத்துக் கொள்கிறார்கள். அதில் பெயர், கம்பெனி எண் மற்றும் ரிலீஸான தேதியை மாற்றி கொடுத்து விடுகின்றனர். 3 லட்சத்துக்கும் அதிகமான பணத்தினை வாங்கி கொண்டு சின்ன ட்ரிக்கை வைத்து ஏமாற்ற தொடங்கி இருக்கிறார்கள். இதற்காகவே நீங்க IPA வாங்கிய பின்னர் MOM தளத்தில் பதிவிட்டு உங்கள் தகவல்கள் சரிதானா என செக் செய்து கொள்ளுங்கள்.

இன்னொரு பித்தலாட்டமும் செய்கிறார்கள். IPA வை செக் செய்யும் போது எல்லாம் சரியாக இருக்கும். ஆனால் பெயர் வேறு ஒருவருடையதாக இருக்கும். அதனால் அப்ரூவ் என வந்தால் கூட அதில் உங்கள் பெயர் இருப்பதையும் செக் செய்து கொள்ளுங்கள்.

ஏஜென்ட் செய்யும் பித்தலாட்டங்களால் சிக்கும் தமிழக இளைஞர்கள் நிலையை நினைத்து பாருங்கள். சிங்கப்பூரில் விசா எடுக்க அதிகப்பட்சமாக $180 சிங்கப்பூர் டாலராக தான் இருக்கிறது. அதனால் இப்படி வேலை தேடும் போது எல்லாம் ஓகேவான பிறகே மற்ற தொகையை கொடுங்கள். முதலில் வெறும் 10 ஆயிரத்தினை கொடுங்கள். அதுவே உங்களுக்கு பிரச்னையில் இருந்து தப்பிக்க உதவும்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts