TamilSaaga

சோசியல் மீடியாக்களில் இனி இஷ்டத்துக்கு பேச முடியாது… வருகிறது கிடுக்கிப்பிடி போடும் புதிய சட்டம்… சிங்கப்பூர் அரசின் அதிரடி ஆப்பு!

மக்களின் ஆன்லைன் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்டிருக்கும் புதிய சட்டத் திருத்தத்துக்கு சிங்கப்பூர் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்திருக்கிறது. இந்த புதிய சட்டத்தின்படி, தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்கள் கொண்ட பதிவுகளை சமூக வலைதளங்கள், புகார் செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்கேயே நீக்கியாக வேண்டும். ஒருவேளை அவ்வாறு நீக்கப்படவில்லை என்றால், IMDA எனப்படும் சிங்கப்பூரின் ஊடக மேம்பாட்டு ஆணையம், சிங்கப்பூர் குடிமக்கள் குறிப்பிட்ட தளங்களுக்குச் செல்வதைத் தடுக்கும் வகையில் இணைய சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிட முடியும்.

இது சிங்கப்பூர் மக்களின் இணைய தள பயன்பாட்டு பாதுகாப்பை மேம்படுத்த உதவும் என்கிறது அரசு. சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் கடந்த அக்டோபர் 3-ம் தேதி முதல்முறையாகத் தாக்கல் செய்யப்பட்ட இணையதள பாதுகாப்பு (இதர திருத்தங்கள்) சட்டத் திருத்த மசோதா (The Online Safety (Miscellaneous Amendments) Bill) பற்றி கிட்டத்தட்ட இரண்டு நாட்களுக்கு மேலாக காரசார விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் இரு தரப்பையும் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் கலந்துகொண்டு, தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.

மேலும் படிக்க – “ஆப்” வைத்த ஆப்பு… “அந்த” ஆசைக்கு பொண்ணு வேஷம் போட்டு சீட்டிங் செய்த ஆசாமி… வச்சு செய்த சிங்கப்பூர் நீதிமன்றம்

குறிப்பாக, ஒரு பதிவு தீங்குவிளைவிக்கும் உள்ளடக்கம் கொண்டது என்பதை எப்படி வரையறை செய்வீர்கள்? தனிப்பட்ட நபர்களுக்கு இடையிலான பிரைவசியை எப்படி பாதுகாப்பீர்கள் என்பன போன்ற பல்வேறு முக்கியமான கேள்விகளை எம்.பிக்கள் முன்வைக்கவே, அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. `தீவிரவாதத்தைப் பரப்புவது, தற்கொலை மற்றும் தங்களைத் தாங்களே கொடுமைப்படுத்துவது, உடல் மற்றும் பாலியல்ரீதியிலான துன்புறுத்தல், குழந்தைகள் பாலியல் வன்கொடுமை போன்றவைகளை தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் கொண்டதாக இந்த புதிய சட்டத் திருத்தத்தில் வரையறுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், பொதுமக்கள் உடல்நலனுக்குக் கெடுதல் விளைவித்தல் மற்றும் சிங்கப்பூரின் தேசிய இனரீதியிலான நல்லிணக்கம் மற்றும் மதரீதியிலான நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு ஊறு விளைவிக்கும் வகையிலான பதிவுகளையும் சோசியல் மீடியாக்களில் இருந்து நீக்க இந்த சட்டத் திருத்தம் வழிவகை செய்கிறது.

வாதத்தில் கலந்துகொண்டு பேசிய சில எம்.பிக்கள் குழந்தைகளுக்கான ஸ்கிரீன் டைம் எனப்படும் நேரத்தையும் வரையறை செய்ய வேண்டும் என்ற வாதத்தையும் முன்வைத்தனர். இதுபோன்ற தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களைக் கொண்ட பதிவுகள் வெளிநாடுகளைச் சேர்ந்ததாக இருந்தாலும், அதைத் தடை செய்ய முடியும். இதற்கு முன்னர் வெளிநாட்டுப் பதிவுகளை முறைப்படுத்தும் வகையிலான சட்டம் சிங்கப்பூரில் நடைமுறையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விவாதத்தின் இறுதியில் பேசிய தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜோசபீன் டியோ, `தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களைக் கொண்ட பதிவுகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்கிற ஒரு விஷயத்தில் மிகத் தீவிரமாகப் பணியாற்றவே இந்த சட்டம். குறிப்பிட்ட அதுபோன்ற பதிவுகளை விட்டுவிட்டு பொதுவாக நாம் சட்டம் இயற்றினால், தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியாமல் போகும். வருங்காலங்களில் தேவையான திருத்தங்களை நாம் செய்துகொள்ளலாம். இது சிங்கப்பூர் குடிமக்களின் ஆன்லைன் பாதுகாப்பை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பங்கு’ என்று குறிப்பிட்டார்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts