TamilSaaga

லட்சத்தீவுகள் ட்ரிப்பின் மூலம் ‘google புரட்சி’ ஏற்படுத்திய மோடி…20 ஆண்டுகளில் இல்லாத சாதனை!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் விரிவாக்கப்பட்ட திருச்சி விமான நிலையத்தின் ஒரு பகுதியை திறந்து வைப்பதற்காக கடந்த ஜனவரி இரண்டாம் தேதி திருச்சிக்கு வருகை புரிந்தார். தமிழ்நாட்டில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற அவர் அரசியல் பயணம் நிமித்தமாக லட்சத்தீவிற்கு பயணம் மேற்கொண்டார். லட்சத்தீவில் காலையில் எழுந்து வாக்கிங் செல்வது, கடலுக்குள் மூக்கில் குழாயை சொருகி கொண்டு டைவ் அடிப்பது, கடற்கரையில் இயற்கையின் அழகை ரசித்துக்கொண்டே ஓய்வெடுப்பது போன்ற தான் செய்த அனைத்து செயல்களையும் புகைப்படத் தொகுப்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்.

இதற்கிடையே மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் லட்சத்தீவு பற்றி கூறிய அவர் லட்சத்தீவின் இயற்கை அழகு தன்னை பிரமிக்க வைத்ததாக கூறியுள்ளார். இந்நிலையில் லட்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்ட பிறகு இதுவரை இல்லாத ஒரு google புரட்சி நடந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பொதுமக்கள் google-ல் லட்சத்தீவை பற்றி உலாவி உள்ளதாக புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளன.

மேக் மை ட்ரிப் எனப்படும் சுற்றுலாக்களுக்கு புக் செய்யும் செயலியில் லட்சத்தீவை பற்றிய தேடல் ஆனது இதுவரை இல்லாத அளவில் உயர்ந்து 3400% அதிகமாகியுள்ளதாக கூறுகின்றன. இந்தியா மற்றும் இல்லாமல் உலகளவில் சோசியல் மீடியாவில் லட்சத்தீவு பிரபலம் ஆகியுள்ளது. மேலும் லட்சத்தீவில் என்னென்ன வசதிகள் உள்ளன, சுற்றுலா செல்வதற்கு ஏற்ற இடமா? ஹோட்டல்களின் வசதி என்ன? என்பது குறித்த பல்வேறு தேடல்களில் மக்கள் இறங்கி உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்திய பிரதமரின் சுற்றுலா கூகுளில் இந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மையில் ஆச்சரியப்படக்கூடிய விஷயமாகும். இதனால் இதுவரை மாலத்தீவு மட்டுமே மிகவும் பிரபலமான சுற்றுலா தீவாக இருந்து உள்ள நிலையில் தற்பொழுது அதனுடன் போட்டி போடும் அளவிற்கு லட்சத்தீவின் மவுசு மக்களிடையே உயர்ந்துள்ளது என்றே கூறலாம்.

Related posts