TamilSaaga

புது பொலிவுடன் ஜுராங்கில் திறக்கப்படும் பேருந்து நிலையம்… எந்தெந்த பேருந்துகள் இதன் வழியாக இயங்கும்?

சிங்கப்பூரின் ஜுராங் பகுதியில் புது பொலிவுடன் நவீன வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட உள்ளது. பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கருத்தில் கொண்டு பேருந்து நிலையம் ஆனது சிறப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கருத்துக்கள் வெளியாகியுள்ளன. மேலும் பேருந்து நிலையம் ஆனது ஜுராங் ஈஸ்ட் எம்ஆர்.டியுடன் இணையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நடப்போருக்கான மேம்பாலம், கூரையுடன் கூடிய நடைபாதை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கூரை வழியாகவே எளிதாக எம் ஆர் டி நிலையத்திற்கு செல்லலாம்.மேலும் நடை பாதையானது ஜுராங் கேட் சாலையுடன் இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த புது பேருந்து நிலையம் ஆனது நவம்பர் 26 ஆம் தேதி முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து ஏறும் பொழுது பொது மக்களின் வசதிக்காக இளைப்பாறும் இருக்கைகள், சக்கர நாற்காலி பயன்படுத்துபவர்களுக்கு தனியான வழித்தடங்கள், உடைமாற்றும் அறைகள் என பல வசதிகளுடன் பேருந்து நிறுத்தம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள் குழந்தைகளை பராமரிப்பதற்கான தனிஅறைகள், பயணிகள் தனியாக அமர்ந்து அமைதியாக இருப்பதற்கு தேவையான தனி அறைகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. பேருந்து எண் 78,160போன்றவை பேருந்து முனையத்தில் வழியாக இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் பேருந்து எண் 770 புது முனையத்திலிருந்து இயக்கப்பட்டு ஜுராங்கிஸ் நகரை இணைக்கும் வகையில் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts