TamilSaaga

சிங்கப்பூரின் 3 செயற்கைக்கோளுடன் விண்ணில் சீறும் இந்தியாவின் PSLV-C53 ராக்கெட்.. இன்னும் 24 மணி சிங்கப்பூரையே பெருமைப்பட வைக்கப்போகும் அற்புதம்! – உற்று நோக்கும் உலக நாடுகள்!

இந்தியாவின் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து நாளை (ஜூன்.30) மாலை 6 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.

இந்த ராக்கெட்டில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த 3 செயற்கைகோள்களும் அனுப்பப்டுகிறது. இவை விண்ணில் குறிப்பிட்ட இலக்கில் நிறுத்தப்பட உள்ளன. இந்த ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான 25 மணி நேர கவுண்ட்டவுன் இன்று (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. தொடர்ந்து ராக்கெட்டுக்கு தேவையான எரிபொருள் நிரப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ராக்கெட் மற்றும் அதில் பொருத்தப்பட்டுள்ள செயற்கைகோள்களின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

சிங்கப்பூரை சேர்ந்த மூன்று செயற்கைக்கோள்களில் முதன்மையானதான DS-EO செயற்கைக்கோள் 365 கிலோ எடை உடையது. இது தெளிவாக வண்ண புகைப்படங்களை எடுக்கும் திறன் உடையது.

மேலும் படிக்க – 24 மணி நேரத்தில் 2 மடங்கு அதிகரித்த தொற்று.. 2 ஆண்டுகளுக்கு பிறகு கனவுகளுடன் சிங்கை செல்ல காத்திருக்கும் ஊழியர்கள்.. புதிதாக விசா பெற்றவர்களுக்கு சிக்கலா? – Exclusive Report

இரண்டாவது சிங்கப்பூர் செயற்கைக்கோள் பெயர் NeuSAR. இதன் எடை 155 கிலோ. NeuSAR சிங்கப்பூரின் முதல் சிறிய வணிகச் செயற்கைக்கோள் ஆகும். இது இரவும் பகலும் மற்றும் அனைத்து வானிலை நிலைகளிலும் துல்லியமாக புகைப்படம் எடுத்து அனுப்பும் திறன் கொண்டது.

மூன்றாவது செயற்கைக்கோள், சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (NTU) தயாரிக்கப்பட்ட 2.8 கிலோ எடையுள்ள SCOOB-I ஆகும். PSLV ஆர்பிடல் எக்ஸ்பெரிமென்டல் மாட்யூல் (POEM) DS-EO ஆனது எலக்ட்ரோ-ஆப்டிக், மல்டி-ஸ்பெக்ட்ரல் பேலோடைக் கொண்டுள்ளது. இது நில வகைப்பாடு மற்றும் மற்றும் பேரிடர் நிவாரண தேவைகளுக்கு ஏற்ப முழு வண்ணப் புகைப்படங்களை எடுக்கும் திறன் கொண்டது.

சிங்கப்பூரின் NTU ஸ்கூல் ஆஃப் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் சேட்டிலைட் ஆராய்ச்சி மையத்தின் (SaRC) மாணவர் பயிற்சித் திட்டத்தில் தயாரிக்கப்பட்ட முதல் செயற்கைக்கோள் இது என்பது கூடுதல் ஸ்பெஷல்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts